வியாழன், 17 ஜனவரி, 2019

விரி உருவகம் – 2
   பாடலில் “ஆகிய“ என்ற மாட்டேற்றுச் சொல் விரிந்து வருவது “விரி உருவகம்“ ஆகும். ஆகிய என்பது ஆக, ஆ… எனக்குறைந்து நின்றலும் உண்டு.

உ. ம்
புருவம் பிறையாகப், பூமேனிப் பொன்னா,
இருகண்கள் மீனாக, இன்பத் – திருமுகம்
வட்ட நிலவாக, வாயிதழ் கொவ்வையாகக்
கிட்டியதால் ஏதெனக்குக் கேடு ?

பொருள் – புருவம் பிறையாகவும், பூமேனிப் பொன்னாகவும், இரு விழியும் மீனாகவும், இன்பத்தை கொடுக்கும் அவளின் அழகிய முகமானது வட்ட நிலவாகவும், வாயின் இதழ்கள் கொவ்வைப் பழமாகவும் அவள் எனக்குக் கிடைத்துள்ளதால் இவ்வுலகில் எனக்கு எந்த கேடும் இல்லை. மகிழ்ந்திருக்கிறேன். என்பதாம்.
   பாடலில் பிறையாக, பொன்னாக, மீனாக, நிலவாக, கொவ்வையாக.. என்று மட்டேற்றுச்சொல் விரிந்து வந்துள்ளதால் இது “விரி உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
18.01.2019

கருத்துகள் இல்லை: