புன்னாகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புன்னாகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 மார்ச், 2022

நாகப்பூ! (புன்னாகம்)

 


நாகமலர் நல்ல நறுமணம் வீசிடும்!
தேகவலிப் போக்கிடும்! தேர்ந்தஅடி பாகமரம்
திண்மை மிகுந்ததால் தேடிப் பயன்பெறுவர்!
தண்டவாள மாகும் தகவு!
.
(இது நாகலிங்கப்பூ கிடையாது)
.
பாவலர் அருணா செல்வம்
22.03.2022

ஞாயிறு, 6 மார்ச், 2022

புன்னை மலர்! (புன்னாகம்)

 


மொட்டோ குருவியின் முட்டையைப் போலிருக்கும்!
வெட்டை,சொறி, தோல்நோய் விலகிடும்! - குட்டரோகப்
புண்ணைக் குணமாக்கும் புன்னைமலர்! ஈரமற்ற
மண்ணில் வளரும் மரம்!
.
பாவலர் அருணா செல்வம்
04.03.2022