பூக்கள்
மணம்பரப்ப ! ஈக்கள் மதுவருந்த !
தேக்கம்
தெளிந்திருக்க ! தேய்நிலவு – நோக்கமின்றி
மேலிருக்க ! மேனிதொட்ட மேற்றிசைக்
காற்றினிலே
சூலிருக்க ! சொர்க்கம் தர !
குயிலெல்லாம்
பாட ! மயிலெல்லாம் ஆட !
பயிர்கள்
தலைசாய ! பாச – உயிர்கள்
இணைத்தேட ! காற்றும் இதமாக ! காமன்
கணைதொடுக்க ! காதல் வர !
கண்ணோடு
கண்பார்க்க ! கையோடு கைசேர்க்க !
விண்ணோடு
மேகம் விளையாட ! – மண்ணுலகில்
என்னோடு
நீயாட ! உன்னோடு நானாட !
பொன்னான
அந்தப் பொழுது !
(குளக வெண்பா)
கவிஞர் அருணா
செல்வம்
12.07.2014
