செவ்வாய், 19 ஜூன், 2012

குழந்தையின் சிரிப்பு!! (கவிதை)

சத்தம் கேட்டே ஓடிவந்தேன்
    சதங்கை அறுந்து சிதறியதோ!
நித்தம் உனக்கே இதேவேலை!
    நினைத்தால் கோபம் வந்துவிடும்!
பித்தம் பிடிக்கக் கைஓங்கிப்
    பின்னே உணர்ந்தேன்! சத்தமெலாம்
சித்தம் குளிரும் உன்சிரிப்பே!
    சிந்தை குளிர வைத்ததடி!!
54 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

படமும் அதற்கான பதிவும் மிக மிக அருமை
குழந்தையின் சிரிப்பைப்போல கவிதையும்
இயல்பாகவும் மிக மிக அழகாகவும் உள்ளது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

உண்மைதான்..

அதனால் தானோ மழலையை..

மழலைச் செல்வம் என்றனர்!!

Unknown சொன்னது…

அருமையான கவிதை

பெயரில்லா சொன்னது…

படம் + கவிதை = அருமை

Seeni சொன்னது…

unmai !

kuzhanthai sirippu...!

ezhuthida vaarthai illai!

கீதமஞ்சரி சொன்னது…

மழலையின் சிரிப்பை அறுந்த சதங்கையொலியெனக் கொண்ட ஒப்புமை அழகோ அழகு. ஓங்கிய கையையும் வீழச்செய்த மழலைச்சிரிப்பு இன்னும் அழகு. அருமை அருணாசெல்வம்.

சசிகலா சொன்னது…

மழைலைச் சிரிப்பை ரசனையோடு தந்த வரிகள் .

ஆத்மா சொன்னது…

புகைப்படத்துக்கொ பொருத்தமான கவிதை....:) மழலையின் சிரிப்பால் ஏற்படும் சந்தோசத்துக்கு அளவே கிடையாது

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் ரமணி ஐயா!

படத்தை இணையத்திலிருந்து எடுத்தேன் ஐயா.

தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க.

அருணா செல்வம் சொன்னது…

ஆமாங்க முனைவர் ஐயா.

( நாமும் ஒரு காலத்தில் மழலைச் செல்வமாகத்தான் இருந்திருக்கிறோம்.... ஆனாலும் நான் இன்னும் செல்வம் தாங்க. அருணா செல்வம். நல்லா கடிக்கிறேனா... மழலை இல்லையா... கண்டுக்காதீங்க குணா ஐயா.)

தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.

அருணா செல்வம் சொன்னது…

நன்றிங்க ரெவெரி சார்.

(படத்தை இணையத்திலிருந்து எடுத்தேன்.)

அருணா செல்வம் சொன்னது…

“எழுதிட வார்த்தை இல்லை“ - சீனி

ஆமாங்க சீனி... குழந்தையின் சிரிப்பை நான் எவ்வளவு தான் வர்ணித்து எழுதினாலும் எனக்கு திருப்தி வருவதில்லைதாங்க.

நன்றிங்க நண்பரே.

அருணா செல்வம் சொன்னது…

நன்றிங்க கீதமஞ்சரி அக்கா.

உங்கள் வரவு எனக்கு மேலும் எழுத ஊக்கத்தைக் கொடுக்கிறது அக்கா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றிங்க சசிகலா.

அருணா செல்வம் சொன்னது…

சிட்டுக்குருவி...
இந்தப் பாடல்கள் உண்மையில் நீங்கள் கேட்டதற்காகவே வெளியிட்டேன். நீங்கள் படிக்க வில்லையோ என்ற என் கவலை தீர்ந்தது.

நன்றிங்க சிட்டுக்குருவி.

Senba சொன்னது…

Migavum Nandru.....

அருணா செல்வம் சொன்னது…

சென்பா... நன்றிங்க.

ஆத்மா சொன்னது…

அட ட ட டா..........நீங்க ரொம்ப பெரியவராகிட்டீங்க....:)

பெயரில்லா சொன்னது…

நித்தம் உனக்கு இதே வேலை.
ஆமாம்! இப்போ எமது பேரனுடன் அனுபவிக்கிறேன்.
நான் ரெடி. நீங்க ரெடியா என்பது போலச் சிரிப்பார்.
சிரிப்புப் போட்டி வைப்போமா என்பது போலச்சிரிப்பார்.
அழகோ அழகு. தங்கள் கவிதையும் அது போல. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

அருணா செல்வம் சொன்னது…

“நான் ரெடி. நீங்க ரெடியா என்பது போலச் சிரிப்பார்.
சிரிப்புப் போட்டி வைப்போமா என்பது போலச்சிரிப்பார்.“

சிரிப்பிற்கு போட்டி வைத்தால் உங்கள் பேரன் தான் வெற்றி பெறுவான். அவனுக்குச் சிரிப்பினுடன் சேர்ந்த சிறந்த வாழ்க்கை அமையனும் என்று வாழ்த்துகிறேன்.

நன்றிங்க வேதா.இலங்காதிலகம்.

நிரஞ்சனா சொன்னது…

ஆஹா... கவிதையும், அதற்கேற்ற படமுமாக... ஃப்ரெண்ட், உண்மையச் சொல்லணும்னா படிக்கும போது நாம ஏண்டா வளர்ந்தோம்னு மனசுல ஒரு எண்ணம் தோணிச்சு.

சாய்ரோஸ் சொன்னது…

வாழ்க்கையில் எவரொருவரும் தவறவிடக்கூடாத தருணங்கள் தங்கள் மழலைச்செல்வங்களின் அழகை ரசித்து சித்தம் குளிர்வது!... உங்களின் இந்த கவிதையை படித்து உணர்பவர்கள் நிச்சயம் திரைகடலோடி திரவியம் சேர்க்க செல்லமாட்டார்கள்... வெறும் வார்த்தைகளாலான பாராட்டுக்களினால் மட்டும் இந்தக் கவியைப் புகழ்வது போதுமானதல்ல...

அருணா செல்வம் சொன்னது…

நிரஞ்சனா... நீங்க வளர்ந்திட்டீங்களா...?

நான் இன்னும் வளரவில்லை ஃபிரெண்ட்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும்
அழகிய புகழ்மாலைக்கும் மிக்க நன்றிங்க நட்பே.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கவிதைகேற்ற குழந்தையா ?
குழந்தைக்கேற்ற கவிதையா ? அருமை...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_13.html) சென்று பார்க்கவும். நன்றி !

Athisaya சொன்னது…

அடடா நம்ம ஆளு.வணக்கம் வணக்கம்.வரைச்சரத்தில் தங்கள் அறிமுகம் கடைக்கிறது வாழ்த்துக்கள் சொந்தமே!

http://nadodiyinparvaiyil.blogspot.com/2011/05/blog-post.html

Unknown சொன்னது…

மழலை மொழிகள் பேசும் குழந்தைகள் செல்லமான சுட்டிகள்... அருமை தோழரே என் வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்... "பாதை மாறும் பயணம்" கட்டுரை படித்து கருத்துரைக்கவும்... நன்றி

அம்பாளடியாள் சொன்னது…

எமக்கும் தங்கள் கவிதை கண்டு சித்தம் குளிர்ந்து
அருமை!....தொடர வாழ்த்துக்கள் .

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அருணா - மழலைச் சிரிப்பிற்கு ஈடு இணை உண்டோ - அதன் சிரிப்பினில் உலகமே மகிழும் - படமும் கவிதையும் அருமை - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

Seeni சொன்னது…

nanpaa!
vaazhthukkal!

Unknown சொன்னது…

அருமை

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

இடி முழக்கம் சொன்னது…

வரிகள் அல்ல இது மழலை சிரிப்பின் தெறிப்பு.... அற்புதமான வரி..

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க
தனபாலன் ஐயா.
வலைச்சரம் சென்று வந்தேன். நன்றிங்க.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் அதிசயா.

என்னுடைய தொடர்கதை படிப்பதிலிருந்து
கவிதைகளையும் படிக்க ஆரம்பித்து விட்டீர்களா...?
மிக்க நன்றிங்க அதிசயா.

அருணா செல்வம் சொன்னது…

அன்பு சகோ... உங்களை என் தளத்தில் காண மகிழ்கிறேன்.
நான் ஏற்கனவே உங்கள் வலையைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறேன்.
தொடர்ந்தும் வருவேன்.
நன்றிங்க.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் முதல் வருகைக்கு
மிக்க நன்றிங்க.
தொடர்ந்து வந்து வாழ்த்துங்கள் நட்பே.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி நண்பரே.

அருணா செல்வம் சொன்னது…

நன்றிங்க.

அருணா செல்வம் சொன்னது…

நன்றிங்க சுரேஷ் ஐயா.
பேய் தளமா...!!!

பயந்து கொண்டே வருகிறேன்ங்க!!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் முதல் வருகைக்கும்
பாராட்டிற்கும் மிக்க நன்றிங்க நட்பே.

ஜெயசரஸ்வதி.தி சொன்னது…

வலைச்சரம் மூலம் என் முதல் வருகை ...

அருமையான பதிவு ,..!

அருணா செல்வம் சொன்னது…

உங்களின் முதல் வருகைக்கு நன்றி.
தொடர்ந்து வந்து படியுங்கள்.

நன்றி தோழி.

Rasan சொன்னது…

அருமையான வரிகள். அழகாய் எழுதியுள்ளீர்கள். படம் அருமையாக உள்ளது. தொடருங்கள்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றிங்க தோழி.

SELECTED ME சொன்னது…

செம!

அருணா செல்வம் சொன்னது…

நன்றி

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
சிறிய கவிதை மிக அழகாக உள்ளது சிறு வரிதான் கருத்துக்கள் பலரை சிந்திக்கவைக்கும்,20.11.2012இன்று உங்களின் பதிவு வலைச்சரம் கதம்பத்தில் பதிவிடப்பட்டுள்ளது வாழ்த்துக்கள்


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

//சதங்கை அறுந்து சிதறியதோ!// அருமையான கற்பனை!

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி ரூபன்.

அருணா செல்வம் சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கிரேஸ் சகோ.

விசு சொன்னது…

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.. ஆனால் மழலையின் சிரிப்பில் இறைவனே ஆகலாம் போல் இருக்கே. நல்ல கவிதை.