முருகன் பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முருகன் பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 5 ஏப்ரல், 2025
புதன், 22 ஏப்ரல், 2020
நிலம்வாழ அருள்வாயே!
(வண்ணப் பாடல் – 2)
.
தனன தான தனதான
தனன தான தனதான
தனன தான தனதான தனதானா (அரையடிக்கு)
.
விலையி லாத பொருளோடு
குறையி லாத
திருவோடு
வினையி லாத அழகான பெருமாளே!
விரசி லாத மொழியோடு
பிழையி
லாத அணியோடு
வெருவி லாத
மலைவாழும் பெருவேலே!
.
மலைக ளோடு நிறைந்தாடி
இணையி
லாது கலந்தாடி
மனதி னோடு வளமான தமிழாலே
மரபி னோடு விளையாடி
இனிய தான கருவோடு
வழுவி லாத கவிபாடி விழைவேனே!
.
நிலையி லாத உயிரோடு
நிறைவி லாத வகையோடு
கிருமி வாழு முலகான நிலையேனோ?
நிழலி லாத அளவோடு
சுமையி
லாத முடியோடு
நெருட லான உயிரோட வருவாயோ!
.
அலையி லாத கடலேது?
அடரி
லாத இருளேது?
அரிது வான பதிலேது வடிவேலா!
அகம மாக அதையோதி
வதையி
லாத வழியேகி
அளவி லாத நிலம்வாழ அருள்வாயே!
.
பாவலர் அருணா செல்வம்
22.04.2020
லேபிள்கள்:
சந்தம்,
நிலம்வாழ அருள்வாயே,
முருகன் பாடல்,
வண்ணப்பாடல்,
MURUGAN SONG,
VANNAM
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
