மார்கழியில்
பாலைநில மக்களாய் பாடுகின்றேன்!
சீர்முல்லை
மண்ணில் சிறப்பிருந்தும்! - நேர்மையின்றிச்
சாதியினம்
பேசுகின்றார் சார்ந்தவர்கள்! உன்னிடத்தில்
சேதியிதைச்
சொல்லமொழி ஏது?
.
பாவலர்
அருணா செல்வம்
05.01.2022
மார்கழியில்
பாலைநில மக்களாய் பாடுகின்றேன்!
சீர்முல்லை
மண்ணில் சிறப்பிருந்தும்! - நேர்மையின்றிச்
சாதியினம்
பேசுகின்றார் சார்ந்தவர்கள்! உன்னிடத்தில்
சேதியிதைச்
சொல்லமொழி ஏது?
.
பாவலர்
அருணா செல்வம்
05.01.2022
மார்கழி
நற்குளிர் வாட்டியும் மேனிசுடும்!
போர்வையாய்
என்னவளைப் போர்த்துவதால்! - நேர்நிமிர்ந்து
பேசாதி ருந்தும்
பெரியவிழி பேசிவிடும்
கூசாமல்
காதலைக் கோர்த்து!
.
பாவலர் அருணா
செல்வம்
09.01.2022
மார்கழியில்
பூக்கும் மலரெல்லாம் வாசமில்லை!
நார்தொடுத்த
மாலையோ நல்லழகே! - பார்க்க
அழகில்லை!
பாசமுடன் ஆளுமென் நெஞ்சைப்
பழகிப்பார்!
கண்டயர்வாய் பண்பு!
.
பாவலர் அருணா
செல்வம்
04.01.2022