நட்புறவுகளுக்கு வணக்கம்.
நம் மதுரைத் தமிழன் இப்படி ஒரு
கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன? என்ற தலைப்பில் தொடர் பதிவிட என்னையும் அழைத்துள்ளார்
என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. தொடர்ந்து சாமானியன் அவர்களும் அழைப்பு விடுத்துள்ளார்.
இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
நம்மின் சுயத்தை நாமே மறந்துவிட்ட
நிலையில் நம்மைப் பற்றி நாமே அறிந்துக்கொள்ள இந்தத் தொடர் பதிவின் கேள்விகள்
உதவியாக இருக்கிறது என்பது உண்மை. நன்றி மதுரைத் தமிழன்.
சீரியசாக எழுத வேண்டுமாம்.
அதற்காக நான் பதில் எழுதும் முன்
என் கணவரின் முகத்தை மனக்கண்ணில் நிறுத்தி வைத்தால் பதில் சீரியசாக வரும் என்று
மதுரைத் தமிழன் சொன்னதால் உண்மையில் அதன் படியே எழுதியுள்ளேன்.
1.உங்களுடைய 100வது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
என்னை மறக்காமல், என்னை நினைத்துப்
பார்த்து, என் 100வது பிறந்த நாளில் என் பெயரைச் சொல்லி மற்றவர்கள் கொண்டாட
வேண்டும் என்று விரும்புகிறேன்.
2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
நயவஞ்சகர்களின் சூழ்ச்சிகளை
அறியும் ஆற்றலைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
3. கடைசியாக நீங்கள் சிரித்தது எப்போது? எதற்காக?
இப்பொழுது தான்.
காரணம்.... நமது மதுரைத் தமிழன்
அடிவாங்கி அடிவாங்கியே சிரிப்பைத் தொலைத்து விட்டார் போலும். அதனால் தான்
“கடைசியாக“ என்று எழுதியிருக்கிரார். பாவம் தான் அவர்“ என்று அவரை நினைத்துச்
சிரித்தேன்.
4. 24 மணி நேரம் பவர் கட்டானால் நீங்கள் செய்வது என்ன?
“பவர் கட்“ என்றால் கரெண்ட் கட்டாவதைத்
தானே சொல்கிறீர்கள்....?))
இங்கே குளிர்காலமாக இருந்தால் போர்வையை
நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு எடிசனைத் திட்டிக்கொண்டே சோபாவில் சுருண்டு
விடுவேன்.
கோடைகாலமாக இருந்தால் என் கணவருடன்
பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சேன் நதியோரத்திற்கச் சென்று விடுவேன்.
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாள் அன்று அவர்களுக்கு நீங்கள் சொல்ல
விரும்புவது என்ன?
ஆண் பிள்ளையிடம் விட்டுக்கொடுத்து
அன்பாய் வாழவேண்டும் என்றும்,
பெண்பிள்ளையிடம் விட்டுக்
கொடுக்கிறேன் என்று அடிமையாகி விடாதீர்கள் என்றும் சொல்வேன்.
6. உலகில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்தப்
பிரச்சனையை நீங்கள் தீர்க்க விரும்புகிறீர்கள்?
உலகில் என்றால் எவ்வளவோ பிரட்சனைகள்
உள்ளது. அதில் ஒன்றே ஒன்றை மட்டும் உடனடியாக தீர்க்க முடியும் என்றால் இலங்கை
பிரட்சனையை உடனடியாகத் தீர்ப்பேன்.
7. உங்களுக்கு ஒரு பிரட்சனை. அதைத் தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க
விரும்புவீர்கள்?
யாரிடம் கேட்டாலும் பிரட்சனை
பெரியதாகுமே தவிர குறையாது. அதனால் எனக்கு நானே சுயஆய்வு செய்து பார்ப்பேன்.
இருப்பினும் முடிவு தெரியவில்லை என்றால் காலத்தின் கையில் விட்டுவிடுவேன்.
8. உங்களைப் பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார். அதைக்கண்டால்
நீங்கள் என்ன செய்வீர்கள்?
அவர் என்னைப் பற்றி ஏதும்
“அறியாதவர்“ என்று மன்னித்து சும்மா விட்டுவிடுவேன்.
9. உங்களின் நண்பரின் மனைவி இறந்து விட்டால் என்ன சொல்வீர்கள்?
ஆறுதல் சொல்ல வார்த்தை தெரியாததால்
(இல்லாததால்) நானும் அவருடன் சேர்ந்து அழுதுவிட்டு வருவேன்.
10. உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
தோழிகளுக்குப் போன் செய்து அரட்டை
அடித்து (வெட்டியாக) பொழுதைப் போக்குவேன்.
அனேகமாக நீங்கள் அனைவரும்
எழுதிவிட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதனால் நான் தொடர் பதிவிட யாரையும்
அழைக்க முடியவில்லை. இருப்பினும் இன்னும் யார் யாரெல்லாம் எழுதவில்லையோ அவர்கள்
அனைவரையும் என் சார்பாகத் தொடர் பதிவிட அழைக்கிறேன்.
அன்புடன்
அருணா செல்வம்.
25.06.2014
