காமக்கிழத்தன் அவர்களுக்கு வணக்கம்.
யாதெனில்
உங்களின் வலையில் வந்து கருத்திடும் இடத்திற்கு வர முடியவில்லை என்பதாலும், மின்
அஞ்சல் முகவரியும் இல்லாததாலும் இந்தக் கடிதத்தை
வலையில் பதிக்கிறேன்.
தவறெனில்
மன்னிக்கவும்.
ஐயா...
உங்களின் நல்ல நல்ல பதிவுகளைப் படிக்கும் ஆர்வத்தில் உங்களின் வலையைத் திறந்தால்
அது துள்ளிக் கொண்டே இருக்கிறது. இதுவரையில் நான் உங்களின் பதிவு ஒன்றையும் படித்ததில்லை.
இதற்கு
முன் “பசி பரமசிவமாக“ நீங்கள் தான் எழுதினீர்கள் என்று நினைக்கிறேன். அப்பொழுதும்
இப்படித் தான் வலை துள்ளியது. ஏன் அப்படி?
ஐயா,
என்னைப் போன்று உங்களின் படைப்புகளைப் படிக்க விரும்பும் மற்றவர்களுக்கும்
சேர்த்து இந்தக் கோரிக்கையை முன் வைக்கிறேன். உங்களின் வலையின் துள்ளலை நிறுத்தி நாங்களும்
படிக்க உதவுமாறு வேண்டுகிறேன்.
இதையே
ஆரூரார் அவர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
நட்புடன்
அருணா செல்வம்.
24.05.2014
