ஒரு டாக்டரின் வீட்டில் குழாய் ரிப்பேர்
ஆகிவிட்டது. அதைச் சரி செய்ய வந்த ப்ளம்பர் வேலையை முடித்துவிட்டு 200 ரூபாய் கூலி
கேட்டார்.
அதற்கு டாக்டர், “என்னப்பா இது!
நானே ஒரு பேஷண்டுக்கு 100 ரூபாய் தான் ஃபீஸ் வாங்குகிறேன். நீ 200 ரூபாய்
கேட்கிறாயே?“ என்றார்.
அதற்கு ப்ளம்பர், “ஆமாம் சார்.
ஆனால் நான் என் வேலைக்கு இரண்டு வருடம் உத்திரவாதம் (கியாரண்டி) கொடுக்கிறேன்.
உங்களால் இந்த மாதிரி உத்திரவாதம் தர முடியாது இல்லையா... அதனால் தான் என் கூலி
200 ரூபாய்“ என்றார்.
அதைக்கேட்ட டாக்டர் பேசாமல் 200
ரூபாயைக் கொடுத்து அனுப்பினார்.
-படித்ததைப் பகிர்ந்தேன்-
தமிழே வென்றது...! (கவிதை)
அலைபோல் ஓயா
இரும்பலினால்
அமைதி அற்ற ஓய்வின்று!
சுளைபோல் சொற்கள்
இருந்தாலும்
சோர்வாய்ப் படுக்கை தேடிடுது!
வலைபோல் பின்னும்
என்மனமோ
வடிக்கக் கவிதை எண்ணிடுது!
உலைபோல் உடம்பு
கொதித்தாலும்
உயர்ந்த தமிழே வென்றிடுது!
அருணா செல்வம்.
அருணா செல்வம்.