முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 17 அக்டோபர், 2023
வெள்ளி, 28 டிசம்பர், 2018
புகழ் உவமை! - 7
பாடலில்
வந்திருக்கும் உவமைகளைப் புகழ்ந்து கூறுவது “புகழுவமை“
ஆகும்.
உ. ம்
மேலிருந்து கீழ்ப்பாயும் வெண்மயில்போல் நீரருவி
வேலிருக்கும் கூர்,பாறை வீற்றிருக்கும்! – வேலியெனச்
செவ்வேல் முருகனுடன் எந்நாளும்
வாழ்வதனால்
எவ்வுயர்வு வேண்டும் இதற்கு!
பொருள் – மேலிருந்து கீழ்ப்பாயும் வெண்மயிலைப் போன்ற அருவியும், கந்தனின் வேலில் இருக்கும் கூர்மை
போன்று கூர்மை நிறைந்த பாறைகளும் மலையில் வீற்றிருக்கும். உலகின் வேலியென காக்கும்
முருகனுடன் இவைகள் எந்நாளும் வாழுவதால் இதைவிட வேறு உயர்வு இதற்கு வேண்டுமா ?
பாடலில் அருவிக்கு ஒப்பாக வந்த மயிலும், கூர்மையான
பாறைகளுக்கு ஒப்பாக வந்த வேலும் முருகனுடன் இருப்பவைகள். மயிலும் வேலும் உவமையாக வந்து
அவை இரண்டும் முருகனுடன் எந்நாளும் இருப்பவைகள் என்றும், இதைவிட உயர்வு இதற்கு வேறில்லை
என்றும் உவமைகளைப் புகழ்ந்து வந்துள்ளதால் இது “புகழுவமை“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
28.12.2018
லேபிள்கள்:
அணி இலக்கணம்,
உவமை அணி 7,
கவிதை,
தண்டியலங்காரம்,
புகழ் உவமை,
முருகன்,
வெண்பா
திங்கள், 30 அக்டோபர், 2017
வேல் பந்தம்! - சித்திர கவிதை!
லேபிள்கள்:
சஸ்திர பந்தம்,
சித்திர கவிதை,
முருகன்,
வேல் பந்தம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

