SANTHAK KALI VIRUTHAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SANTHAK KALI VIRUTHAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஜனவரி, 2023

தங்கமொழி! (சந்தக் கலிவிருத்தம்)

 


.
தந்ததன தந்ததன தந்ததன தந்தா
.
விந்தையென எண்ணுகிற விண்ணுலகு மேலாய்
வந்தொளிர நின்றொளிர வந்ததெது கூறு!
சந்தமிகு தன்மையொடு சன்னமிசை யான
சிந்தையொடு வண்ணமிகு செந்தமிழை நாடு!
 
அன்னையொடு வந்தவழி அன்புமிக மேவும்!
புன்னகையில் இன்பமொளிர் பொங்குவது பாடும்!
தன்னிறைவு கொண்டநிலை தன்னிசையி லாடும்!
அன்னமென உண்டுணர ஐயநிலை யோடும்!
 
பஞ்சநிலை என்பதிலை பண்ணொலியு மஞ்ச
விஞ்சிவரும் இன்பநிலை வெண்டளையி லொன்ற
கொஞ்சுகிற இன்பமது கொண்டமொழி யென்று
தஞ்சமிட நம்புகிற தங்கமொழி யன்றோ!
.
பாவலர் அருணா செல்வம்
04.01.2023