இலக்கித்தைப்
பொறுத்தவரை யாராவது தவறு செய்து விட்டால் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவிற்குப் பயங்கரக்
கோபம் வந்துவிடும்.
“இலக்கியத்தில்
தவறே இல்லை. தவறு செய்யக் கூடாதது இலக்கியம்“ என்பார்.
பெர்னார்ட் ஷா
காலத்தில் ஓர் இளம் கவிஞர் இருந்தார். அவர் பெர்னார்ட் ஷாவின் தீவிர விசிறி.
ஆங்கில இலக்கியத்தில் பெர்னார்ட் ஷாவைப் போல் தானும் புகழ்பெற வேண்டும் என்று அவர்
விரும்பினார்.
ஒரு சமயம், அந்த
இளம் கவிஞர், “நான் ஏன் உயிர் வாழ்கிறேன்“ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார்.
அதை பெர்னார்ட்
ஷாவின் விமர்சனத்திற்கு அனுப்பி வைத்தார்.
கவிதையைப்
படித்த பெர்னார்ட் ஷாவிற்கு ஒரே எரிச்சல் வந்தது. அந்தக் கவிதை சுத்த பேத்தலாக
இருந்தது. கரு சரியில்லை... நடை சரியில்லை.... கையெழுத்துச் சரியில்லை.... என்று
எத்தனையோ கோளாறுகள் அந்தக் கவிதையில் இருந்தன.
கவிதையின்
தலைப்பை மறுபடி படித்தார் பெர்னார்ட் ஷா.
அவர் உடனே அந்த
இளம் கவிஞருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
“இளைஞனே! உன்
கவிதையை எடுத்துக் கொண்டு நீயே நேரில் வராமல் நல்ல வேலையாகத் தபாலில் அனுப்பி
வைத்தாய். அதனால் தான் நீ இன்னும் உயிர் வாழ்கிறார்“ என்று எழுதி அனுப்பி
வைத்தார்.
-படித்ததைப் பகிர்ந்தேன்-
அருணா செல்வம்.