நாளை நாளை என்றெண்ணி
நாளை
நாமும் ஓட்டிவிட்டோம்!
வேலை வேலை என்றோடி
வேலை
இன்றித் தவித்துவிட்டோம்!
மாலை தந்து மணந்தவரை
மாலை வந்தும்
மறந்துவிட்டோம்!
நாளை காலை இதைமாற்றி
நாளும்
நமதாய் ஆக்கிடுவோம்!
நட்புறவுகள் அனைவருக்கும்
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
மலைப்புடன் நினைத்த வாழ்க்கை
மகிழ்ச்சியாய் நிலைக்க வேண்டும்!
அலைகடல் உப்பாய் இன்பம்
அனைத்திலும் இருக்க வேண்டும்!
நிலைத்திடும் கல்வி பெற்று
நேர்மையாய் வாழ வேண்டும்!
கலைத்திறன் மிளிரும் ஆண்டாய்க்
கவிதையாய்
வரவே வேண்டும்!!
அருணா செல்வம்
31.12.2014
