கூடிருந்த மரமெல்லாம் குருவி இன்றிக்
குளமிருந்த கோவிலெல்லாம் தண்ணீர்
வற்றி
வீடிருந்த இடமெல்லாம் உயிரும் இன்றி
விருந்தென்ற சொல்லுக்குப்
பொருளும் இன்றி
நாடிருந்த நினைவெல்லாம் நினைவில் சுற்ற
நானிருக்கும் நிலையினிலே பாடு
கின்றேன்!
ஏடிருக்கே! எழுத்தாணி துணையாய் நிற்க
ஏக்கத்தை அதிலெழுதிப் போக்கு
கின்றேன்!
அருணா செல்வம்
26.11.2014
