தீபாவளி வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீபாவளி வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 நவம்பர், 2020

தீபாவளி வாழ்த்து!

 


புத்தம் புதிய பட்டாடை,
   பொன்னால் செய்த அணிகலமும்
சத்தங் கூட்டும் பட்டாசும்
   சத்து நிறைந்த பலகாரம்
நித்தம் நினைக்கும் நல்லன்பும்
   நிறைந்த தீப நன்னாளில்
மொத்தம் கிடைக்க வாழ்த்துகிறேன் 
   முன்னைத் தெய்வ மொழியாலே!

.
தோழ தோழியர் அனைவருக்கும் இனிய தீபவொளி வாழ்த்துகள்.
.
பாவலர் அருணா செல்வம்
14.11.2020

வெள்ளி, 28 அக்டோபர், 2016

தீபாவளி வாழ்த்து !





வண்ண வண்ணப் புத்தாடை !
    வாசல் மின்னும் கோலங்கள் !
கண்ணைப் பறிக்கும் மத்தாப்பு !
    கருத்தைக் கவரும் புஸ்வானம் !
விண்ணில் வெடிக்கும் பட்டாசு !
    விஞ்சி சேர்ந்த பலகாரம் !
எண்ணம் மகிழும் இந்நாளில்
    இனிதாய் வாழ வாழ்த்துகிறேன் !

பாவலர் அருணா செல்வம்
29.10.2016