33 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
33 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 பிப்ரவரி, 2022

உந்தூழ் மலர்! (மூங்கில்பூ)

 


மூங்கிலின் பூக்களே முன்னோரின் உந்தூழ்பூ!
ஓங்கும் மரம்பூக்க உண்டாகும் - மூங்கரிசி
உண்ணும் எலிகள் உழவினைப் பாழாக்கும்!
தண்டுதவும் சாரமெனத் தந்து!
.
பாவலர் அருணா செல்வம்
23.02.2022

திங்கள், 21 பிப்ரவரி, 2022

செம்மல் மலர்! (ஜாதிமல்லி)

 


செம்மலெனப் பாராட்டிச் சீராட்டிப் போற்றுவார்!
செம்மையின்றி வீழும்பூ செம்மலாம்! - நம்முன்னோர்
செம்மல் மலரென்று செப்பினார்! இன்றழைப்பார்
இம்மலரைச் சாதிப்பூ என்று!
.
பாவலர் அருணா செல்வம்
21.02.2022