அன்பு விளக்கில் அகமிருக்க,
அனைத்துச்
சொந்தம் சேர்ந்திருக்க,
இன்பம் எல்லாம் நிலைத்திருக்க,
ஏற்றம்
கூடி வலுத்திருக்க,
நன்மை மட்டும் சூழ்ந்திருக்க,
நாளும்
எண்ணம் உயர்ந்திருக்க
என்றும் கிடைக்க வழிசெய்வாள்
இன்று
பிறக்கும் தைமகளே !
நட்புறவுகள் அனைவருக்கும்
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
அருணா செல்வம்.

