(படித்ததில் சிந்திக்க வைத்தது)
உலகில்
முதல் அணுகுண்டை விஞ்ஞானிகள் உருவாக்கிக் கொண்டிருந்தனர்.
அதன்
உருவாக்கப் பணிகளைப் பார்த்துவிட்டு வந்த டாக்டர் ராபர்ட் ஆப்பன்ஹீமர் (Dr. Robert Oppenheimer) அமெரிக்க காங்கிரஸ்
கமிட்டி முன்னால் அணுகுண்டு பற்றிய விவரங்களை விளக்கிக் கொண்டிருந்தார்.
அவர்
கூறியதை அங்கு கூடியிருந்த அனைவரும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது
ஒருவர் எழுந்து, “இவ்வளவு ஆபத்தான அணுகுண்டிலிருந்து தப்பிக்க ஏதேனும்
பாதுகாப்புக் கருவி இருக்கிறாதா?“ என்று கேட்டார்.
“இருக்கிறது“ என்றார் டாக்டர் ராபர்ட்.
“என்ன
அது?“
“அது தான் ”சமாதானம்!“ என்று
கூறிவிட்டு புன்னகைத்தாராம் டாக்டர் ராபர்ட் ஆப்பன்ஹீமர்.
