சொர்க்கம்!!
இறந்த பிறகு
சொர்க்கம் போகலாம்
என்பார்கள். நீ
என் அருகில்
இருக்கும் போதே
சொர்க்கம்
தெரிகிறதே...
2. இன்பம்!
என்னை நீ
பார்க்கும்
பொழுதெல்லாம்
இன்பம் என்றாய்.
உன்னை நான்
நினைக்கும் பொழுதும்
இன்பமடா.
3. பூ அழகா?
பூ அழகு
என்பார்கள்....
உன் புன்னகையைக்
காணாத வரையில்!
4. அமுதம்!
அமுதம் என்று
சொன்னார்கள்.. நான்
அறிந்ததில்லை.
குமுத வாயால்
நீ கொடுத்த
முத்தச் சுவையை
அறியும் வரை.
5. வா கண்ணே!
கோவிலுக்கு
ஏன் போகிறாய்?
சாமியிடம்
நீ கேட்கும்
நல்வாழ்வை
நான் தருகிறேன்.
என்னிடம் வா கண்ணே...
அருணா செல்வம்
05.02.2015




