நட்புறவுகளுக்கு வணக்கம்.
இன்று
கொஞ்சம் “கடி“ ஜோக்ஸ் பதிந்துள்ளேன். சும்மா வந்து சிரித்துவிட்டு போங்க.
1.
இவர்- “நாங்கள் ஏழு பேர் ஒரே குடையின் கீழ் நடந்து
சென்றோம். ஆனால் ஒருத்தர் கூட நனையவில்லை“
மற்றவர் – “அதெப்படி?“
இவர் – “அப்போது தான் மழையே பெய்யவில்லையே....“
2
ஆசிரியர் – “ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும்
வரையாம விட்டு வச்சிருக்கே?“
மாணவன் – “அது வாயில்லாப் பிராணி சார்“
3
ஆசிரியர் – “வேடந்தாங்கலுக்கு வருகிற பறவைகள் எல்லாம்
எங்கிருந்து வருகின்றன?“
மாணவன் – “முட்டையிலிருந்து தான் சார்“
4
ஒருவன் – “படகுல ஏறி பார்க்கலாமா?“
மற்றவன் – “அது முடியாது. ஏரியில தான் படகைப் பார்க்க
முடியும்“
5.
ஆசிரியர் – “உலகில் எங்கெல்லாம் பெட்ரோல்
கிடைக்கிறது?“
மாணவன் – “எல்லா பெட்ரோல் பாங்க்குகளிலும் சார்“
6.
ஆசிரியர் – “படிச்சி முடிச்சதற்கு அப்புறம் என்ன
பண்ணலாம்ன்னு இருக்க?“
மாணவன் – “புக்கை மூடி வைக்கலாம் என்று இருக்கிறேன்
சார்“
7.
ஆசிரியர் – “சுரேஷ்... நீ மட்டும் ஏன் ஹோம் வொர்க்
பண்ணலை?“
சுரேஷ் – “நான் ஹாஸ்டல்ல தங்கி இருக்கிறேன் சார்“
8.
ஆசிரியர் – “நீ மூன்றாம் மாடியில் இருக்கும் போது தீ
பிடித்துக்கொள்வதாக நினைத்துக்கொள். எப்படி அங்கிருந்து தப்பிப்பாய்?“
மாணவன் – “ரொம்ப ஈஸி சார். கற்பனைப் பண்ணுவதை
நிறுத்திக்கொள்வேன்“
9.
ஆசிரியர் – “உங்க பையன் இங்கிலிஸில் படு வீக்கா இருக்கிறான்
சார்“
பையனின் தந்தை – “தமிழிலே எப்படி இருக்கிறான்னு
சொல்லுங்க சார்“
ஆசிரியர் – “தங்களின் மகன் ஆங்கிலத்தில் மிகவும்
வலுவிழந்து இருக்கிறான் ஐயா“
பையனின் தந்தை - ???!!!
10.
ஒருவன் – நீண்ட நாள் உயிரோட வாழ என்ன வழி?“
மற்றவன் – “வேறென்ன... சாகாமல் இருப்பது தான்“
11.ஒருவர் – “காபி டம்ளரை வாய்கிட்ட வெச்சிக்கிட்டு
அவர் என்ன பேசிக்கிட்டு இருக்கிறார்?“
மற்றவர் – “ஆவியோட பேசுறாராம்“
12.
ஒருவர் – “காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க?“
மற்றவர் – “அவங்க “மெய்“ மறந்து
காதலிக்கிறவங்களாச்சே!“
13.
ஒருவர் – “நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் என்று
நினைத்தேன்“
மற்றவர் – “செய்வது தானே...“
முதலாமவர் – “கை எச்சலாகி விடுமே....“
14.
நோயாளி – “டாக்டர்.... எனக்கு மூனு மாதமா கடுமையான
இருமல்..“
டாக்டர் – “அப்படியா? இத்தனை நாளா சும்மாவா இருந்தீங்க?“
நொயாளி – “இல்லை டாக்டர். இருமிகிட்டே தான்
இருந்தேன்“
15.
அவர் – “நேத்து உங்க காருக்கு எப்படி ஆக்ஸிடென்ட்
ஆச்சு?“
இவர் – “அதோ... அங்க ஒரு மரம் தெரியுதில்லையா?“
அவர் – “ஆமாம். தெரியுது.“
இவர் – “அது நேற்று எனக்குத் தெரியவில்லை“
கேட்டதில் சிரித்தது
அருணா செல்வம்
