GANABATHI SONG லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
GANABATHI SONG லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 டிசம்பர், 2021

கணபதி திருப்பள்ளியெழுச்சி!

 


கடலடி சிவந்திடக் கதிரவன் பிறந்தான்!

     கார்நிற மங்கையோ கண்துகில் விரித்தாள்!

மடலிடம் வண்டுகள் மதுவினைத் தேட

     மாங்குயில் கிளிகளும் மந்திரம் பாடும்!

உடலிலும் மனத்திலும் உன்னுரு நினைவாய்

     ஓதிடுங் கவியுடன் உன்னெதிர் நின்றேன்!

கடமையும் கருணையும் செய்திட வேண்டி

     கணபதி யே!பள்ளி எழுந்தரு ளாயே!

.

பாவலர் அருணா செல்வம்

28.12.2021