28 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
28 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 ஜூன், 2023

வலி ஒழுகல் ஏந்திசை வண்ணம் !

 


 தனன தத்தன தனன தத்தன
தனன தத்தன தனதானா  (ஒரு கலைக்கு)
 
விதி கொடுத்திடும் அடி!
.
விதிகொ டுத்திடு மடிவ லிக்கிற
      வினைந டத்திடு மியல்தானே!
 விலைய ளிக்கிற செயல்மு டிக்கிற
     விசைய முக்கிட வருவாயே!
 
நிதிஎ தற்கென உயர்ம னத்தினை
     நிறைப டுத்தியு மருள்வாயே!
 நினைவ தைக்கிற பசிய டக்கிய
    நிலைய ளித்திடு பெருமானே !
 
சதிய டிக்கிற வினைய கற்றிடு
     சபைய மர்த்திட உயர்வேனே!
  சவலை யுற்றது கவலை பட்டது
     சரவ ணப்புக ழிகழ்வாலே!
 
மதிய ளிக்கிற புதிய கற்பனை
     மனத ளிக்கிற நிழல்தானே!
  மனம யக்கிய துயர்வி ளக்கிய
     மனைய றத்தினை உணர்வேனோ!
.
பாவலர் அருணா செல்வம்
16.06.2023

புதன், 16 பிப்ரவரி, 2022

புழகுப்பூ! (எருக்கம்பூ)

 


ஐந்திதழ்கள் கொண்டவிது ஐங்கரனுக் கானமலர்!
பைந்தமிழ்ப் போன்று பழமையாம்! - நைந்திடாக்
கற்பிளவில் கூடக் கடிதில் வளர்ந்திடுமே
பொற்பயன் மிக்க புழகு!
.
பாவலர் அருணா செல்வம்
15.02.2022