பீர்அடித்த போதையினை உன்றன் கண்கள்
பீறிட்டுக் கொடுக்குதடி! களத்து
மேட்டில்
போரடித்து உழைக்கின்ற மறவன் நெஞ்சுள்
பொங்குதடி அமுதமெனக் காதல்
வெள்ளம்!
தேரெடுத்து வருகின்ற காம தேவன்
தேன்மழையைப் பொழிகின்றான்! தேவி
உன்னைச்
சீரெடுத்து நான்படிக்க நீயும் சொக்கச்
சித்திரமாய்த் தீட்டிடுவோம்! கவிதை
மெல்ல!
அருணா செல்வம்.
