.
திருமாலின் சங்கொலியே சிந்து!
.
துள்ளலந்தப்
போரொலியே! துய்ப்பாயே இன்பமுடன்!
பள்ளிகொண்ட
புன்னகையின் பண்ணினாலே - உள்ளத்
தருள்பிறக்கும்!
சிந்தையொலி ஆர்ப்பரித் தாடும்!
திருமாலின்
சங்கொலியே சிந்து!
.
பாவலர் அருணா
செல்வம்
27.11.2021
.
திருமாலின் சங்கொலியே சிந்து!
.
துள்ளலந்தப்
போரொலியே! துய்ப்பாயே இன்பமுடன்!
பள்ளிகொண்ட
புன்னகையின் பண்ணினாலே - உள்ளத்
தருள்பிறக்கும்!
சிந்தையொலி ஆர்ப்பரித் தாடும்!
திருமாலின்
சங்கொலியே சிந்து!
.
பாவலர் அருணா
செல்வம்
27.11.2021
.
சுடர்ந்திடும்
தீயே! சூரிய னுருவே!
தடங்களை நீக்கியே
தாங்கிடும் வழியே!
இருளின் நீட்சி
இடத்தை மாற்றிடும்!
மருட்சி நீக்கி
மலர்மன மாக்கும்!
வாழ்வைக் காக்க
வளருந் தீயே!
ஆழ்கடல் நடுவில்
தீவி னழகே!
மங்கலஞ் சேர்ந்து
வழிபடு மொளியே!
தங்கமு மோடும்
தகையொளி முன்னே!
தினமும் காணத்
திறக்கும் ஞானம்!
மனமது மெதுவாய்
வலம்வர வைத்திடும்!
கானே! தேனே
வாழி! பொன்பொது
தானே! வாகையே
தகைவகை வானே!
தாது பொன்பொழி
வானே! தேனே!
காத்திடுந்
தீயே! காமாட்சி தாயே!
.
பாவலர் அருணா
செல்வம்
18.11.2021
பதியாகக்
காக்கும் கணபதியே!
.
தாயே
உன்துதிக்கை தருமே பலமே!
மாயே உனைவணங்க
மாறிடும் வினைகளே!
பூவே கொடுக்கும்
போதை எமக்கு!
நாவே காக்கும்
கானக் கவியே! நீயே
விதிமணி மதிவான்தேன்!
வா!நின்மேன் நியாதி
பதியாகக்
காக்கும் கணபதியே!
.
பாவலர் அருணா
செல்வம்
14.04.2021