99 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
99 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 ஜூன், 2022

99. தாழை! (தென்னந்தாழை)

 


.
தென்னை மரம்முழுதும் சீராய் பயன்தரும்!
தென்னம்பூ பாளை தேடியதைத் - தின்னக்
குடலிறக்கம் பேதி குணமாகும்! சூட்டின்
உடலெரிச்சல் போக்கும் உணவு!
.
பாவலர் அருணா செல்வம்
14.06.2022
 

(கைதை என்பது தாழம்பூ
தாழை என்பது தென்னந்தாழை)

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

பலாசம்பூ! (புரச மரப்பூ)

 


காட்டுத்தீப் போல்பூத்துக் காய்க்கும் பலாசமரம்!
வீட்டுக் கழகாய் விளைகியது! - கூட்டிவைத்த
காய்ந்த மலர்களைக் காய்ச்சிக் குடித்துவர
நோய்பல ஓடும் நொடிந்து!
.
பாவலர் அருணா செல்வம்
24.02.2022

சனி, 19 பிப்ரவரி, 2022

பீரம் மலர்! (பீர்க்கம்பூ)

 


நார்ச்சத்து மிக்க நலந்தரும் பீர்க்கங்காய்
பார்வையை மேலும் பலப்படுத்தும்! - நீர்த்தன்மை
மிஞ்சும் உடலை மெலியவைக்கும் வாசமற்ற
மஞ்சள் நிறப்பூ மலர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
17.02.2022

திங்கள், 31 ஜனவரி, 2022

கொன்றை மலர்! (சரக்கொன்றை)

 


மலமிளக்கும்! வாயு வயிற்றுநோய் போக்கி 
நலந்தருங் கொன்றை நமக்கே! - உலர்ந்த
இலையுடன் பூவும் இளைத்த உடல்தேற்றும்!
மலையளவு உள்ளதிதில் மாண்பு!
.
பாவலர் அருணா செல்வம்
31.01.2022