(ப்ரான்சு கம்பன்
கவியரங்கத்தில் வாசித்தக் கவிதை)
தமிழ் வணக்கம்
கம்பனிடம்
கேள்விகேட்கக் கன்னித் தமிழைநான்
தெம்புடன்
தேர்ந்தெடுத்துக் கொண்டுவந்தேன்! – வம்பின்றி
நம்பிக்கை வைத்தே
நயத்துடன் நான்கேட்கக்
கும்பிட்டு நின்றேன்
குனிந்து!
குரு வணக்கம்
கருவெடுத்து
நன்றாய்க் கவியெழுதக் கற்பித்தாய்!
உருவெடுத்து வந்தேன்!
உயிரில் – இருக்கும்
திருவே தீந்தமிழை
இவ்வவையில் பேச
குருவே துணிவைக்
கொடு!
அவை வணக்கம்
ஆறறிவு கொண்டவர்கள்
அந்தமிழின் இன்பத்தை
நூறறிவு கண்கொண்டு
நோக்கிநிற்க! – சீராய்ச்
சுவைத்தமிழின்
சொல்கேட்கச் சூழ்ந்திருக்கும் சான்றோரின்
அவைவணங்கி நின்றேன்
அறிந்து!
கம்பனிடம் ஒரு கேள்வி
நிலையில்லா உலகத்தில்
நிலைத்து நின்று
நெடும்புகழை அடைந்துவிட்ட ஈடில் இன்பம்!
கலைஞர்களின்
கருத்துகளில் புகுந்து நின்று
கவித்தமிழின் தாயாகத் தவழும் தெய்வம்!
தலைநிமிர்ந்து
தைரியமாய்த் தமிழர் நின்று
தரணியிலே வேறுண்டோ என்றே கேட்டு
விலையில்லாச்
செல்வமுண்டே எம்மி டத்தில்
விண்ணமுதம் வேறுண்டோ என்றே சொல்லும்!
இத்தரையில் இன்பங்கள்
என்ன வென்றால்
இலக்கியத்திற்(கு) இணையாக எதுவும் இல்லை!
எத்தரையில்
இப்புகழைத் தொட்ட வர்கள்
இருந்தாரோ இருப்பாரோ என்றே கேட்டால்
சத்தியமாய்ச்
சரித்திரங்கள் நிறைய உண்டு!
சாதித்த வரலாறும் உலகில் உண்டு!
சுத்தமான
இலக்கணத்தில் மூழ்கி வந்த
சுகமான இராமகதைக்(கு) ஈடும் உண்டோ!
(தொடரும்)
அருணா செல்வம்.
