அகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 பிப்ரவரி, 2022

காதல் என்பது…… !

 

.

காதல் என்பது காமத்தில் முடிவது
ஓதும் பொருளை உணர்ந்தால் தெரிந்திடும்!
சாதல் போன்று சமமாய் அனைவரும்
பேதம் இன்றிப் பிறப்பினில் வருவது!
ஏதோ இன்பம் எழிலைக் கூட்டும்
தீதோ சரியோ திரும்பி ராதது!
இளமை ஊஞ்சலை இயற்கை ஆட்டிட
வளமை நெஞ்சில் வலிமை கொடுக்கும்!
சின்னப் பேச்சும் சிலிர்ப்பைக் கொடுக்கும்
கன்னம் கனிந்திட கவியில் உழலும்!
வண்டு தேனை வகையுடன் உண்ண
மண்டு மலரோ மயங்கியே இருக்கும்!
இந்த நாடகம் இணையும் வரையில்
அந்த உணர்வுக ளடங்கி முடிந்ததும்
கண்டதற் கெல்லாம் கடிதினில் சண்டையே!
சிண்டு முடிந்திடும் சின்னத் தவறும்!
உணவின் சுவையே உண்ட பிறகு
மணத்தை விலக்கி மறுத்தல் போலே
பதுங்க நினைத்துப் பாச மற்றே
ஒதுங்கி நின்று ஓதும் வேதம்!
இந்த உண்மையை இளையோர் மறுப்பர்!
பிந்தி அறிவார் பெரியோர் மொழியே!
.
பாவலர் அருணா செல்வம்
09.02.2022

திங்கள், 15 நவம்பர், 2021

கோபுரச் சித்திர கவி!

 



.
சித்தமே! நல்ல சித்தி மாயே!
நித்தம் புதுநிறை நிதியே! கோவே!
பூவே! பொன்னே! தேனே! ஒளியே 
மேவுறு மிமே! மேமே இங்குகி
மதிவிதி மறைத்திடு முன்னை நினைத்தே
எதிரில் நின்றென் நிவாணமே! நிதிநிலை
கலைநிரல் நிறைகிற கடவுளின் கோபுரமே!
.
பாவலர் அருணா செல்வம்
15.11.2021

ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

மீன் சித்திர கவிதை!



பாடிடப் பாடுவாள் பன்னிசை யோடே!
.
டே இன்வாயோ ! எழுத்தே இசையமுதோ!
பீடே பின்னிய பெருமொழியோ நற்றேன்!
இன்பம் பெருகிடு மின்ண் தமிழால்
துன்பம் துள்ளியே தோய்ந்துட னோடும்!
வான்தரும் வளம்போல் கூடும் நலமெலாம்!
தேன்போல் பாமகள் தின்றிடு மினிப்பை
ஓடியோடித் தே,வுயிர்த் துடிக்கும் பாவைநீ
பாடிடப் பாடுவாள் பன்னிசை யோடே!
.
பாவலர் அருணா செல்வம்
10.04.2021