kaal odoum venba லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kaal odoum venba லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 மார்ச், 2020

கால் ஓடும் வெண்பா!




பெண்ணிழில் காலோடப் பெய்யும் அமுதாகும்!
விண்ணெழில் காலோட விண்சோலை! – மண்ணில்வாழ்
தன்னினம் காலோடத் தாக்குவோர் செய்செயலாம்!
இன்மணம்கா லோட எனது!
.
பெண்ணெழில்மாழை காலோட மழை.
விண்ணெழில்வானம் காலோட வனம்.
தன்னினம்சாதி காலோடச் சதி.
இன்மணம்வாசம் காலோட வசம்.
.
பாவலர் அருணா செல்வம்
25.03.2020

(கால் கூடுதல் என்பதுபானைஎனுஞ்சொல் கால் ஓடப் பானை  எனவாகும் என்பதே. காலுற்ற சொல்லும் காலில்லாச் சொல்லும் அதன் மாற்றுப் பெயர்களை ஏற்றுப் பாடலில் அமைத்துப் பாட வேண்டும்)