இரவில்
மலரும் இனியமலர்! பூக்கப்
பரப்பும்
மனம்நம்மைப் பற்றும்! - சரஞ்சரமாய்க்
கட்டிய
பித்திகத்தைக் கன்னியருஞ் சூடுவர்!
ஒட்டிடும்
ஊடல் ஒழித்து!
.
பாவலர்
அருணா செல்வம்
08.02.2022
இரவில்
மலரும் இனியமலர்! பூக்கப்
பரப்பும்
மனம்நம்மைப் பற்றும்! - சரஞ்சரமாய்க்
கட்டிய
பித்திகத்தைக் கன்னியருஞ் சூடுவர்!
ஒட்டிடும்
ஊடல் ஒழித்து!
.
பாவலர்
அருணா செல்வம்
08.02.2022
சண்பகப்பூ
வாசம் சளையா துறங்கவைக்கும்!
கண்நோய்
தலைநோய் களைப்போக்கும்! - பெண்களின்
உள்ளுறுப்பைச்
சீராக்கும்! ஊறிய நீர்குடிக்கக்
கொள்ளைநோய்
யோடுங் குலைந்து!
.
பாவலர்
அருணா செல்வம்
21.01.2022