துளைகள் கொண்ட வலைகொண்டு
தூங்காக் கடல்மேல் சென்றிடுவார்!
களைப்புக் காணா மனத்துடனே
காத்தி
ருந்து வலைவிரிப்பார்!
வளைக்கை அணிந்த பெண்ணவளின்
வளைக்கும்
கண்போல் மீன்கிடைக்கத்
திளைக்கும் நெஞ்சில் தீமையின்றித்
திரும்பி
வருவார் மீனவர்தாம்!
நிலையே இல்லா உலகத்தில்
நிலையாய்
என்றும் நிற்பதற்கே
மலைபோல் உயர்ந்த கருவமைய
மனத்தை
வலையாய் விரித்திடுவார்!
இலையே ஏதும் இவ்வுலகில்
எல்லாம்
நம்மின் எண்ணமென்றும்
அலைபோல் கவிதை சுரந்துவர
அமிர்தாய்த் தருவார் கவிஞர்தாம்!
சிலைபோல் இருக்கும் பெண்களைத்தம்
செழிக்கும் வாழ்வில் சிறைவைக்கக்
கலைகள் கலந்த மொழிபேசிக்
காதல்
வலையை விரித்திடுவார்!
விலையே அற்ற பெண்ணன்பு
விரும்பும் வகையில் கிடைத்துவிட்டால்
தலையில் சற்றுக் கனமேறத்
தாவிக்
குதிப்பார் காளையர்தாம்!
கொலையே செய்து இருந்தாலும்
குலைந்து
போகாச் சட்டத்தை
வலைத்து வெற்றி பெறுவதற்கே
வார்த்தை
வலையை விரித்திடுவார்!
குலைக்கும் நாய்போல் குரலுயர்த்திக்
கொஞ்சம்
கூட இரக்கமின்றி
விலையாய்ப் பணத்தை வாங்கித்தம்
வயிற்றை
வளர்ப்பார் வழக்கறிஞர்!
வலையாய் எதையும் விரித்தாலும்
வகையாய்
அதிலே மாட்டாமல்
நிலையாய் நிற்கும் நெஞ்சமெது?
நினைக்க
நெருடும் ஒவ்வொன்றும்!
அலைபோல் தொடரும் அடுக்கடுக்காய்
ஆசை அலையை
அடக்கிவிட்டால்
வலையை விரித்தும் சிக்காமல்
வாழும்
வழியோ கிடைக்குமன்றோ!!
அருணா செல்வம்.

