கிரேக்க அறிஞர் பிளாட்டோவிடம் செல்வந்தர் ஒருவர் வந்தார்.
“பெருந்தகையீர்,
என் மகனுக்குத் தாங்கள் கல்வி கற்றுத் தர வேண்டும். அதற்கு எவ்வளவு சம்பளம்
கேட்கிறீர்கள்?“ என்று கேட்டார் செல்வந்தர்.
“500
வெள்ளிக்காசுகள் தாந்துவிடுங்கள்“ என்றார் பிளாட்டோ.
“என்ன... 500
வெள்ளிக் காசுகளா...?“ என்று அதிர்ந்து போய்க் கேட்டார் செல்வந்தர்.
“ஆமாம்“ என்றார்
பிளாட்டோ.
“இது மிக மிக
அதிகம். அதை விடக் குறைந்த பணத்தில் நான் ஓர் அடிமையையே விலைக்கு வாங்கி விடுவேன்“
என்றார் செல்வந்தர்.
அதைக் கேட்டுப்
புன்னகைத்த பிளாட்டோ, “நீங்கள் சொல்வது சரிதான். இதைவிடக் குறைந்த பணத்திற்கு
நீங்கள் ஓர் அடிமையையே வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், அதன் பிறகு பாருங்கள், உங்கள்
வீட்டில் உங்கள் மகனையும் சேர்த்து இரண்டு அடிமைகள் இருப்பார்கள்“ என்றார்
பிளாட்டோ.
அதைக் கேட்ட
செல்வந்தர் உறைந்து போனார்.
-படித்ததைப் பகிர்ந்தேன்-
அருணா செல்வம்.