ரொனால்ட் ரீகன், அமெரிக்காவில் அதிபராக இருந்த போது, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் நிருபர் அவரைப் பேட்டி கண்டார்.
“மிஸ்டர் பிரிசிடெண்ட், அமெரிக்காவில் பெண்கள் ஆட்சி ஏற்படுமா?“ என்று கேட்டார்.
“நிச்சயம் ஏற்படாது“ உடனே பதில் அளித்தார் ரீகன்.
“எப்படி அவ்வளவு திட்டவட்டமாகக் கூறுகிறீர்கள்?“ என்று கேட்டார் நிருபர்.
ரீகன் புன்னகைத்தபடி, “அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட 35 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆனால் எந்தப் பெண்ணாவது தனக்கு 35 வயது நிரம்பி விட்டதாகக் கூறுவார்களா?“ என்றார்.
நிருபரும் “உண்மை தான்“ என்று சொல்லி ஆமோதித்து அவருடன் சிரித்தார்.
படித்ததில் சிரித்தது.
-------------------------------------------------------
சினிமா துறையில் முதல் பெண்மணிகள்!!
1.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவி, நடிகை
அஞ்சலி தேவி. (1959)
2.
தமிழில் முதன் முதலில் லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை
கே.பி.சுந்தராம்பாள்.
3.
முதன் முதலில் சினிமாவில் கதை எழுதி இயக்கி
தயாரிப்பாளராகவும் பணிபுரிந்த பெண் ஃபாத்திமா பேகம்.
4.
முதல் பெண் இசையமைப்பாளர்கள் நர்கீஸின் தாய் ஜடான் பாய்
மற்றும் சரஸ்வதி தேதி.
5.
முதன் முதலில் திரையில் தோன்றி நடித்த நடிகைகள்
துர்காபாயும், அவரது மகள் கமலாபாய் கோகலேயும். (படம் – 1913 இல் வெளிவந்த மோகின்
பாஸ் மாசுர்)
6.
திரையில் தோன்றிய முதல் பெண் குழந்தை நட்சத்திரம் 1918 இல்
வெளியான “கிருஷ்ணா ஜனம்“ படத்தில் நடித்த மந்தாகினி.
“அரிய அறிவுத்துளிகள்“ நூலிலிருந்து.
--------------------------------------------------------
