புதன், 23 ஜனவரி, 2019

வியநிலை உருவகம் – 6





    பாடலில் ஒரு பொருளின் அங்கங்களில் உள்ள பலவற்றினுள், சிலவற்றை மட்டும் உருவகம் செய்தும், சிலவற்றை உருவகம் செய்யாமல் விட்டும், கடைசியில் அந்தப் பொருளையே உருவகம் செய்து உரைப்பது “வியநிலை உருவகம்“ எனப்படும்.

உ. ம்
செங்கண் சிறியனவாய் செய்கை பெரியனவாய்
தொங்குகரப் பாறை துணையாக – எங்கும்
பதமின்றிப் பொங்கிப் பிளிர்கிறதே அந்த
மதங்கொண்ட யானை மலை!

பொருள் – செம்மையான கண்கள் சிறியதாகவும், அதனின் செயல்கள் பெரியதாகவும் தொங்கிடும் தும்பிக்கை என்னும் கரமாகிய கடின பாறை துணையாகவும் எங்கும் பக்குவம் இன்றிக் கோபமுடன் பொங்கிப் பிளிறுகிறது அந்த மதங்கொண்ட யானையாகிய மலை.
   பாடலில் கூறப்பட்ட பொருள் யானை. இவ்யானையின் கண், செயல், தும்பிக்கை ஆகிய மூன்றில் தும்பிக்கைக்குப் பாறையை உருவகப்படுத்தி விட்டு மீதியை உருவகப் படுத்தவில்லை. ஆனால் கடைசியில் இவ்வுறுப்பினை உடைய யானையை மட்டும் மலை என்று உருவகப்படுத்தி இருப்பதால் இது “வியநிலை உருவகம்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்.
23.01.2019

3 கருத்துகள்:

  1. அய்யா, மிக உதவியாய் உள்ளது. ஆனால்,பாடலை மனனம் செய்ய இயலவில்லை.இயன்றால், எளிய எடுத்துக்காட்டுகளை மும் தந்துதவுக. திரைப்படப்பாடற்சான்று கிட்டின் சாலசுகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரைப்பட பாடல் மட்டும் எவ்வாறு மனனம் ஆகிறது

      நீக்கு
  2. வணக்கம் ஐயா.
    இந்தப் பாடல்களை மனனம் செய்வதற்காக நான் எழுதவில்லை. அணி இலக்கணத்தை எளிமைபடுத்த வேண்டியே எழுதினேன். நீங்களும் எழுதிப்பாருங்கள், நன்றி.

    பதிலளிநீக்கு