வழக்கமாக
நெற்றியில் நாமம் போட்டுக் கொள்கிறவர்கள் இருபுறமும் வெள்ளைக் கோடுகளும் நடுவே
சிவப்புக் கோடும் போடுவதுதான் வழக்கம்.
ஆனால்
கலைவாணர் ஒரு சமயம் தன் நெற்றியில் இருபுறமும் சிவப்புக் கொடுகளும் நடுவே வெள்ளைக்
கொடுமாக நாமம் போட்டிருந்தார்.
அதைக் கண்ட
அவரது நண்பர்கள் ஆச்சரியமும் அதே சமயம் குழப்பமும் அடைந்தனர்.
“என்ன...
நாமத்தை வழக்கத்திற்கு மாறாகப் போட்டிருக்கிறீர்கள்?“ என்று கேட்டார் ஒரு நண்பர்.
“இது தான்
இன்றைய இந்தியா!“ என்றார்“ கலைவாணர்.
“புரியவில்லையே!“ என்றார் நண்பர்.
அதற்குக்
கலைவாணர், “வெள்ளை சமாதானத்தின் சின்னம். சிவப்பு டேஞ்சரஸ். முன்பெல்லாம் நம்
நாட்டில் சமாதானத்தின் நடுவே குழப்பம் இருந்தது. இப்போது குழப்பத்தின் நடுவே
சமாதானம் இருக்கிறது“ என்று தன் நெற்றியில் போட்டிருந்த நாமத்தைக் காட்டியபடி
சொன்னார்.
அப்போதைய குழப்ப
இந்தியாவை ஒரு சாதாரண நாமத்தின் மூலம் வெளிப்படுத்திய கலைவாணரின் அறிவை எண்ணி
நண்பர்கள் வியந்தனர்.
படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.