வெள்ளி, 6 ஜூலை, 2012

அழுக்கு எழுத்து...!!


வள்ளுவன் காலந்தொட்டு
வாழுங்கால் இன்றுவரை
பிறன்மனை நோக்காமை
பேராண்மை என்றார்கள்!

தீராண்மை கொண்டவர்க்கே
திருத்தமென பாடல்கள்!
பாரான்..மை பாவையர்க்கோ
பாசாங்கின் பல்பொருட்கள்!

சீராக நடந்தவரை
சிரந்தாங்கும் வேறில்லை!
நேராக நிமிர்ந்தமர
வேரானதோ நேரில்லை!

பூக்கள்சில தேனூற்ற
பூச்சயினைத் தானழைக்க
ஈக்களின்மேல் பழிபோட்டே
எழுதுவதே பண்பென்றால்...

நோக்கலிலே புரிவதையும்
நோயாக்கி மறைத்துவிட்டு
பாக்களிலே பண்புயர்த்திப்
பாடுவதில் பயனென்ன?

பார்க்கும் காட்சிகள்
பார்வைக்குப் பாரமாய்...
கேட்டிடும் ஒலிகள்
காதுக்குள் குளவியாய்..
மனமறிந்த உண்மைகள்
மதிக்குள்ளே மருட்டலாய்...

ஏடெடுத்து எழுதிட
ஏங்கிடும் சொற்களை
எழுதாமல் மறைத்திட
ஏக்கமாய்ப் பார்த்தது.

மனமறிந்த துன்பத்தை
மாற்றாமல் காகிதத்தில்
துப்பிவிட துடிக்கின்றேன்
துடைத்திடுங்கள் எச்சிலென!!


20 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க கவிதை வீதி சௌந்தர்.

      நீக்கு
  2. ஏடெடுத்து எழுதிட
    ஏங்கிடும் சொற்களை
    எழுதாமல் மறைத்திட
    ஏக்கமாய்ப் பார்த்தது.//

    அதுதான் கவிதையாக மலர்ந்து விட்டதே!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் புலவர் ஐயா.

      இது மலர்ந்தும் மலராத கவிதைங்க.

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க.

      நீக்கு
  3. மனமறிந்த துன்பத்தை
    மாற்றலாம் தான்..பிடித்தது கரு...வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதெல்லாம் காயமா... வடுவா...
      என்பதே தெரியவில்லைங்க ரெவெரி சார்.
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வணக்கம் எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சார்....

      முதல் முறையாக என் வலைக்குள் வந்து படித்த அனைத்துப் பதிவிற்கும் பின்னோட்டம் இட்டு சென்றுள்ளீர்கள். மிக்க நன்றிங்க.
      தொடர்ந்து உங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்.
      நன்றிங்க சார்.

      நீக்கு
  5. நல்லதொரு கவிதை....
    ஆண்மீகத்தோடு தொடர்புபடுத்தினீர்களோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிட்டுக்குருவி....
      இது
      ஆண்மீகத்தோடு தொடர்பு என்று சொல்லமுடியாது.
      வேண்டுமானால்...
      ஆண்...மோகத் தொடர்பு என்று சொல்லலாம்.
      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க சிட்டுக்குருவி.

      நீக்கு
  6. கொஞ்சம் சிரமப்பட்டுத் தான் புரிஞ்சுக்கிட்டேன் இந்தக் கவிதைய... (நம்ம, ஸாரி.. என் மண்டைக்குள்ள அவ்ளவ்தான்) நல்லா இருக்குது ஃப்ரெண்ட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிரஞ்சனா...
      இந்த மாதிரி கவிதைகள் எல்லாம் கோபத்தில் அந்த அந்த நேரத்தில் வந்து விழுவது. கொஞ்ச நாள் கழித்து நானே படித்துப் பார்த்தால் எனக்கும் புரியாது. நம்மைப் போன்ற சிறியவர்களுக்கு இது புரியாமல் இருப்பதே நல்லது. பெரியவர்கள் படித்து புரிந்துகொள்ளட்டும் ஃபிரெண்ட்.

      நன்றிங்க நிரஞ்சனா.

      நீக்கு