செவ்வாய், 17 டிசம்பர், 2013

அண்ணாவின் ஆங்கில அறிவு!


                                                        அறிஞர் அண்ணாவின் திறமைகளையும் சாதனைகளையும் பாராட்டி அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகம் அவருக்கு “டாக்டர் பட்டம்“ வழங்கி கெளரவித்தது.
   பட்டம் பெறுவதற்கு முன், பட்டம் பெற இருப்பவர்கள் யேல் பல்கலைக்கழக அறிஞர்களைச் சந்தித்து உரையாடுவது வழக்கம்.
   பட்டம் பெற இருப்பவர், அதற்குத் தகுதியானவர் தானா என்பதை அறிய மிகவும் நாகரீகமாக நடத்தப்படும் சோதனைதான் அந்த உரையாடல்.
   அந்த உரையாடலின் போது யேல் பல்கலைக்கழக அறிஞர்கள் அண்ணாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டனர்.
   “பிகாஸ்என்ற சொல்லை அடுத்தடுத்துத் தொடர்ந்து மூன்று முறை வரும்படி அமைத்து ஓர் ஆங்கில வாக்கியம் அமைக்க வேண்டும். முடியுமா உங்களால்?“
   இது தான் அறிஞர்கள் கேட்ட கேள்வி.
   அதற்கு அண்ணா புன்னகைத்தவாறே, “நோ சென்டன்ஸ் பிகின்ஸ் ஆர் எண்டர் பிகாஸ்”.  பிகாஸ்”, பிகாஸ்இஸ் எ கன்ஜகஷன்! (No sentence begins or ends  with  ‘because’. Because’, ’because’ is a conjunction) என்றார்.
   இதன் தமிழ் விளக்கம் இது.
   ஏனென்றால்என்ற சொல்லைக் கொண்டு எந்த ஒரு வாக்கியமும் தொடங்குவதுமில்லை. முடிவதுமில்லை. “ஏனென்றால்”, ஏனென்றால்என்பது ஓர் இணைப்புச் சொல்“
   அறிஞர் அண்ணாவின் இந்த ஆங்கிலப் புலமையைக் கண்டு வியந்த யேல் பல்கலைக்கழக அறிஞர்கள், டாக்டர் பட்டம் பெற அவர் தகுதியுடையவரே என்பதைப் புரிந்து கொண்டனர்.

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்

22 கருத்துகள்:

கும்மாச்சி சொன்னது…

தகவலுக்கு நன்றி அருணா.

Seeni சொன்னது…

Arumai

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
சிறப்பான பதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
த.ம 3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் சொன்னது…

அறிஞர் அண்ணாவின் புலமையை அறியத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்....

அம்பாளடியாள் சொன்னது…

இதுவரை அறிந்திராத தகவல் .அறிஞர் அண்ணா பாரத நாட்டிற்குக்
கிடைத்த மா பெரும் பொக்கிஷம் ! சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி அருணா .

நம்பள்கி சொன்னது…

அண்ணாவின் ஆங்கில மொழிப் புலமை (அறிவு அல்ல!)) என்பதே சரியாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து!

நம்பள்கி சொன்னது…

+1

Avargal Unmaigal சொன்னது…

கலைஞர் ஆட்சி மீண்டும் வந்தால் இதை பதிவிட்ட அதுவும் அண்ணா ஆங்கிலத்தில் சொன்னதை தமிழில் அழகாக மொழி பெயர்த்தற்கு உங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஏற்பாடு செய்கிறேன்

ஸ்ரீராம். சொன்னது…

கேள்விப்பட்டிருக்கிறேன்.

aavee சொன்னது…

முன்பே கேட்டிருக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி..

Unknown சொன்னது…

அண்ணாவைப் பற்றித் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள உதவும் பதிவு. வாழ்த்துக்கள்.

உஷா அன்பரசு சொன்னது…

அண்ணாவாச்சே...! காஞ்சிபுரத்தில் அண்ணா வாழ்ந்த வீடு பொதுமக்கள் காட்சிக்காக வைத்திருக்கிறார்கள். ஒரு முறை அங்கு போனேன்... அண்ணா எத்தனை எளிமையானவர் என்பது அவர் வாழ்ந்த வீடே சாட்சியாய் சொன்னது.

இது போன்ற அறிஞர்களின் வாழ்வில் நடந்த விஷயங்களை அடிக்கடி சொல்லி நினைவில் வைத்து கொள்வது நல்ல விஷயம்.. தொடர்க!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை சகோதரி...

வாழ்த்துக்கள்...

ராஜி சொன்னது…

பகிர்வுக்கு நன்றி அருணா!

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான தகவலுடன்
கூடிய பகிர்வு
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

? சொன்னது…

Because the above quote is wrong, can Yale univ' revoke his honorary doctorate?

முதலாவதாக ஏல் பல்கலைகழகம் அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் ஏதும் வழங்கவில்லை. அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய ஒரே பல்கலைகழகம் அண்ணாமலை பல்கலைகழகம்தான். யேல் பல்கலையில் Chubb Fellowship மூலம் அங்கு சென்று உரையாற்றினார், அவ்வளவுதான். நம்மூர் மாதிரி பிட் நோட்டீஸ் போல எல்லா அரசியல்வாதிகளுக்கும் நடிகர்களுக்கும் டாக்குடர் பட்டம் வழங்குவது மேற்குலகில் வழக்கமில்லை. இப்படி சமீபத்தில் உரையாற்றிய அறிஞர் ஷாருக்கான்! அவரிடம் இப்படி ஸ்கூல் லெவல் ஆங்கில கேள்வி ஏதும் கேட்கப்பட்டதாக தெரியவில்லை!

http://chubbfellowship.org/about/sort/by_name

இன்னொரு விடயம், அண்ணாவுக்கு ஆங்கில புலமை மிகுதியாக இருக்காலாம். ஆனால் இந்த கதையை எழுதிய ஆளுக்கு ஸ்கூல் லெவல் ஆங்கில அறிவு மட்டும்தான் இருக்கிறது. (அமெரிக்கா உட்பட) பள்ளி பிள்ளைகளுக்கு because-யை வைத்து வாக்கியத்தை ஆரம்பிக்க வேண்டாம் என கற்றுத் தருவதன் நோக்கம் குழந்தைகள் வாக்கியத்தை முழுமை அடையாமல் விட்டுவிடுவார்கள் என்பதே.(உ-ம்) Because he woke up late. (sentence fragment)

http://theadvancededit.com/grammar/grammar-myths-debunked-starting-sentences-with-because/

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

அண்ணாவின் ஆற்றலை ஆழ்ந்து படித்துணா்ந்தேன்
பண்ணாளும் மேன்மை படைப்பு

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…

தமிழ்மணம் 10

ராஜி சொன்னது…

தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரமிருப்பின் தொடருங்க அருணா! http://rajiyinkanavugal.blogspot.in/2013/12/blog-post_19.html

Jeyachandran சொன்னது…

அருமை....
வழக்கம் போல், எனது முகநூலின் பக்கங்களுக்கு திருடி சேர்த்துக்கொண்டேன்....

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை. முன்பே படித்திருந்தாலும் மீண்டும் படித்தேன். ரசித்தேன்!