சனி, 28 ஜூலை, 2012

அப்பப்பா....!!! (கவிதை)
அப்பப்பா! என்னகத்தை
   ஆட்கொண்ட பேரழகே!
ஒப்பப்பா என்றெழுத
   எவ்வுலகும் ஈடில்லை!
உப்பப்பா உணவிற்கே!
   உணர்வப்பா உயிருக்கே!
செப்பப்பா செந்தமிழை!
   சிந்தையுளம் குளிர்ந்திடவே!

தப்புகின்ற சொல்லெல்லாம்
   தயவேண்டி எனைக்கெஞ்சி
ஒப்புகின்ற உவமையிலே
   ஒப்பிடவே கேட்டுவரும்!
செப்புகின்ற பாட்டெல்லாம்
   செந்தமிழின் செல்வமடி!
உப்பிடுதே மனமெல்லாம்
   ஊர்வசியே உன்நினைவால்!!


  

22 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க முரளிதரன் ஐயா.

   நீக்கு
 2. பதில்கள்
  1. ஓட்டுப்பட்டையை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை.
   (யாராவது வலை நண்பர்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள் ப்ளீளீளீஸ்)

   முயற்சிக்கிறேன் ஐயா.
   நன்றிங்க.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

   நீக்கு
 4. நாங்களெல்லாம் வார்த்தைகளைத் தேடி
  வீதி வீதியாக அலைகிறோம்
  எல்லாம் உங்கள் வசப்பட்டிருப்பது
  தங்கள் கவிதைகளைப் படித்தால்தான் புரிகிறது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களிடம் வசப்பட்ட வார்த்தைகளுக்கு கிடைக்கும்
   கருத்து வட்டம் உங்கள் வலைப்பக்கம் வந்தாலே
   தெரிந்துவிடுகிறதே ஐயா...
   அருமையான வலைப்பு மாலை அது!
   நான் அங்கே தமிழ்த்தேன்
   அருந்தவரும் தேனீ ஐயா.

   நன்றிங்க ரமணி ஐயா.

   நீக்கு
 5. அப்பப்பா..
  அகம் கவர்ந்த காரிகையின்
  நினைவுகள் இங்கே
  அழகுதமிழில் கவியாகி நிற்கிறதோ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும்
   ரசனைமிக்க கவிதைக்கும்
   மிக்க நன்றிங்க நண்பரே!

   நீக்கு
 6. இணைத்துள்ள படம் போல கவிதையும் அருமை அன்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றிங்க பாஸ்.

   (எனக்கு உங்களிடம் ஓர் உதவி தேவை. உங்கள் வலைக்குள் வந்து எழுதுகிறேன்.)

   நீக்கு
 7. அப்பப்பா....எப்பிடியெல்லாம எழுதுறீங்க..
  எனக்கு ஒரு கவித ஞாபத்துக்கு வருது அத அப்புறமா சொல்லிக்கிறேன்
  இப்ப சகுணம் சரியில்ல போல தோணுது.

  வாழ்த்துக்கள் அழகிய புணைவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிட்டுக்குருவி.... பூனை ஏதாவது குறுக்கே வந்து விட்டதா...?

   அட சே.... இல்லையென்றால் எனக்கு ஒரு கவித கெடச்சி இருக்கும்..... ஏ பூனை... ஓடி போயிடு...உன்னை அப்புறமா வந்து பாத்துகிகிறேன்.

   சிட்டுக்குருவி.... நான் பூனையைத் தொறத்தி விட்டுட்டேன். நீங்கள் கவித சொல்லுங்க.

   நன்றிங்க சிட்டு!

   நீக்கு
 8. காதலை சொல்லச் சொல்ல முடியாமல் நீண்டுகொண்டே இருக்கிறது !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் இனிய தோழி ஹேமா...

   நீங்கள் சொன்னது உண்மைதாங்க.
   இன்னும் நான் சொல்லவே இல்லைங்க.

   நன்றிங்க ஹேமா!

   நீக்கு
 9. எத்தனை ப்பப்பா....அசத்திட்டிங்க சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க சசிகலா.

   நீக்கு