ஞாயிறு, 22 ஜூலை, 2012

காதல்...!!! (கவிதை -2)

உண்மைக் காதல் வந்துவிட்டால்
   உடனே சிறகும் முளைத்துவிடும்!
எண்ணம் எல்லாம் அதைநினைத்து
   ஏங்கி ஏங்கி மனம்மகிழும்!
உண்ணும் உணவும் மறந்துவிடும்!
   உறக்கம் எங்கோ தொலைந்துவிடும்!
கண்கள் திறந்தே இருந்தாலும்
   கனவாம் உலகில் மிதக்கவிடும்!

பத்துப் பொருத்தம் பார்க்காது!
   படிப்பைக் கூட நினைக்காது!
சொத்துச் சுகத்தை ஏற்காது!
   சோசி யத்தை மதிக்காது!
கத்தும் சாதி பேதத்தைக்
   காதில் போட்டுக் கொள்ளாது!
யுத்தம் வீட்டில் நடந்தாலும்
   உறுதி யாக கைபிடிக்கம்!

எதுதான் காதல் என்றேநாம்
   எடுத்துச் சொல்ல முன்வந்தால்
இதுதான் காதல் என்றுசொல்லி
   இனிமை சேர்க்க முடியவில்லை!
மதுவோ குடித்தால் மனம்மகிழும்!
   இதுவோ நினைத்தால் மனம்சுழலும்!
எதுவோ இதிலே இருக்கிறது!
   இதனால் உலகம் சுழல்கிறது!!


(காதல் தொடரும்)

15 கருத்துகள்:

 1. ஆமாம்... அன்பு தான் இன்னும் இந்த உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது...
  பகிர்வுக்கு நன்றி ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதாங்க ஐயா.

   தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

   நீக்கு
 2. //பத்துப் பொருத்தம் பார்க்காது!
  படிப்பைக் கூட நினைக்காது!//உண்மை அன்பரே

  பதிலளிநீக்கு
 3. உண்மைக் காதலில் நம்பிக்கை இழந்துவிட்டேன். காதல் என்பதும் உடல் மற்றும் மனத் தேவைகளுக்காக ஏற்படுத்தப்படும் ஒப்பந்தமே. கூடுதலாக பணமும், வசதியும் இருந்தால் திருமண ஒப்பந்தமாக மாறும் இல்லையேல் முறிந்துவிடும் . அவ்வளவே !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் இக்பால் செல்வம் ஐயா.

   உங்களின் கருத்துபடி பார்த்தால் அது
   உண்மையான காதல் இல்லை தாங்க நண்பரே.

   உண்மை காதல் பிரியலாம்... பிரிக்கப்படலாம்... ஆனால் தோற்காது நண்பரே.

   தங்களின் முதல் வருகைக்கும் தயங்காத கருத்துரைக்கும்
   மிக்க நன்றிங்க ஐயா.

   நீக்கு
 4. சுழலும் உலகத்தையும் சுழற்றும் வலிமை கொண்டது காதல். அழகிய கவிதைக்குப் பாராட்டுகள் அருணா செல்வம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகிய பின்னோட்டம் தந்தமைக்கு
   மிக்க நன்றிங்க கீதமஞ்சரி அக்கா.

   நீக்கு
 5. kaathal rasam!
  kottiyathu-
  en
  mel!

  aanaal suttida vittai-
  iniththathu!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... நீங்களும் கவிதை எழுதி இருக்கிறீர்களா...!!!

   நல்லா இருக்குதுங்க.
   நன்றிங்க சீனி ஐயா.

   நீக்கு
 6. உண்மை தான் சகோ எதுவோ இதில் இருக்கு .

  பதிலளிநீக்கு
 7. அழகான வரிகள் வாசிக்கும் போதே இனிக்கிறது மனதுக்கு....

  பதிலளிநீக்கு
 8. காதல் என்று சொல்லும்ப்பொதே ஒரு சந்தோஷம்.ஆனல் அது நிரந்தரமாகத் தங்க அதிஷ்டம் நிறைய வேணும் !

  பதிலளிநீக்கு