வெள்ளி, 18 மே, 2012

காதல் கண்ணே...!! (கவிதை)
பீர்அடித்த போதையினை உன்தன் கண்கள்
    பீறிட்டுக் கொடுக்குதடி! களத்து மேட்டில்
போரடித்து உழைக்கின்ற மறவன் நெஞ்சுள்
    பொங்குதடி அமுதமெனக் காதல் வெள்ளம்!
தேரெடுத்து வருகின்ற காம தேவன்
    தேன்மழையைப் பொழிகின்றான்! அருகில் வந்தால்
சீரெடுத்து நான்படிக்க நீயும் சொக்கச்
    சித்திரமாய்த் தீட்டிடுவேன்! காதல் கண்ணே!!
    

14 கருத்துகள்:

 1. நல்ல எண்சீர் விருத்தம். பீர் என்ற வார்த்தையினைத் தவிர அனைத்தும் தூய தமிழில் அமைந்துள்ளது. பீருக்கு பதிலாக வேறு வார்த்தை பயன்படுத்தி இருக்கலாம். அது கவிதையின் அழகை சற்று குறைப்பது போல் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றிங்க ஐயா.

   நீக்கு
 2. எதுகை தவறாத சந்தக் கவிதை அருமை ஃப்ரெண்ட்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கு ரொம்ப ரொம்ப
   நன்றிங்க ஃப்ரெண்ட்!

   நீக்கு
 3. சீரெடுத்து நான்படிக்க நீயும் சொக்கச்
  சித்திரமாய்த் தீட்டிடுவேன்! காதல் கண்ணே!!

  மிகச் சரி
  ஆண்டவன் அடியெடுத்துக் கொடுத்தால்
  பக்திப் பரவசக் கவிதையும்
  காதலி எடுத்துக் கொடுத்தால் இதுபோல்
  காதல்ரஸம் கொட்டும் அழகிய கவிதைகள் பிறப்பதும்
  சகஜம்தானே
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதாங்க ரமணி ஐயா.
   (அடியெல்லாம் கொடுக்கத் தேவையில்லை. ஆசையாக ஒரு பார்வை பார்த்தால் போதும். அருவியாகக் கொட்டும்)

   தங்களின் தொடர் வருகையே எனக்கு அதிகம் உற்சாகம் ஊட்டுகிறது ஐயா. நன்றிங்க.

   நீக்கு
 4. அழகான வார்த்தைகளின் அணிவகுப்பு .. அருமையான கவிதை சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி சகோ!

   நீக்கு
 5. அன்பின் பகிர்தலாய் "விருது" ஒன்றை பகிந்துள்ளேன்
  நேசத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள் (:

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்தாலி அவர்களே
   அன்பின் பகிர்தலாய் நீங்கள் தரும்
   “விருது“ற்கு “நன்றி“ என்ற வார்த்தையை மட்டுமே
   மனமகிழ்ந்து சொல்கிறேன்.

   நன்றிங்க நண்பரே!

   நீக்கு
 6. அருமை.
  காதல் ரசம் சொட்டுகிறது.
  எங்கேயும் காதல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க கவிஞரே!

   (கவிஞரே... உங்கள் வலையில்
   காதல் ரசம் கொட்டுகிறதே...!!
   அங்கேயும் காதலா...?)

   நீக்கு
 7. காதல் கண்ணா போதையேற்றும் பானமா .... !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாங்க என் இனிய தோழி...

   அந்தக் கண்கள்
   போதையேற்றும் பானம் மட்டுமில்லை
   பாதையை மாற்றும் போதையும் கூட தாங்க...

   நன்றிங்க ஹேமா.

   நீக்கு