வியாழன், 25 அக்டோபர், 2012

வரலாற்றுச் சுவடே... வருக! வருக!
 வருக வருக வரலாறே
   வந்து நிறையப் பதிவிடுக!
பெருகப் பெருக என்றெண்ணிப்
   புதுமை வரவைத் தந்திடுக!
சிறுகச் சிறுக விஞ்ஞானம்
   சிறந்த வழியைக் காட்டிடுக!
பருகப் பருக இனிக்கின்ற
   பழமைத் தமிழ்போல் உயர்ந்திடுக!  

பெருமை சேர்க்கும் பதிவுகளைப்
   பெயருக்(கு) ஏற்ப தந்திடுவார்.
திருவைப் போன்ற கருத்துகளைத்
   தினமும் நமக்கு அளித்திடுவார்!
கருமைக் கண்ணுக்(கு) அழகாகும்!
   கலைஞன் வரவோ நிறைவாகும்!
அருமை நண்பர் வரலாற்றை
   அருணா அன்பாய் வரவேற்றேன்!


அருணா செல்வம்.
  

(
நிறைய நாள் கழித்து வந்திருக்கிறேன், ஸ்பெஷல் வரவேற்பு ஏதும் கிடையாதா? :) :)....)

வரவேற்றது போதுங்களா வசு..?

39 கருத்துகள்:

arasan சொன்னது…

இந்த வரவேற்புக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் என்பதை என் காதில் மட்டும் சொல்லுங்க மேடம் ..

arasan சொன்னது…

எங்கோ போருக்கு போயிட்டு அப்படியே வந்துட்டார் போல கையில் வில் அம்பு எல்லாம் வைசிருக்கரே

ஆத்மா சொன்னது…

ஆமா வசு வைக் காணாமே ரொம்பப் பேரு ஏங்கிப் போயிட்டாங்களாம்.......

அழகா இருக்கிறது வரவேற்பு

பெயரில்லா சொன்னது…

Too much....அவரும் நீங்களும் நம்ம தோஸ்துங்ரனால சும்மா விடுறேன்...-:)

Prem S சொன்னது…

அடடா வரலாறு சுவடுகளுக்கு கவிதையில் வரவேற்பா கலக்குங்க

அம்பாளடியாள் சொன்னது…

அமோகமான வரவேற்புத்தான் .உங்களுடன் சேர்ந்து
நாங்களும் வரவேற்கின்றோம் சகோதரி இந்தாங்கோ
பூச் செண்டு :)

Admin சொன்னது…

போச்சு... அவர் வந்து இதையும் மனப்பாடம் செய்ய போறார்...

MARI The Great சொன்னது…

பொறுக்காதே... நல்லது நடந்தா உங்களுக்கு பொறுக்காதே! :) :)

MARI The Great சொன்னது…

எந்தக்கடையில் இந்த பூச்செண்டை வாங்கினீர்கள் என்று கூற இயலுமா...ஏன்னா ரெண்டாவது விலைக்கு வித்துரலாம் பாருங்க! :)

வாழ்த்துக்கு மிக்க நன்றி!

MARI The Great சொன்னது…

விட்டுருவோமா ஸ்க்ரீன்ஷாட்டே எடுத்து வச்சிருக்கோம் பாஸித் பாய்!

MARI The Great சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்.., பொற்கிழி ஏதும் கேட்க மாட்டீங்களே? :) :)

MARI The Great சொன்னது…

நீங்களும் தான் இருக்கீங்களே ரெவெரி...எவ்வளவு நல்லா கவிதையெல்லாம் எழுதுறீங்க...உங்ககிட்ட எத்தனை தடவை கெஞ்சி கேட்டிருப்பேன்...இது மாதிரி ஒரு வாழ்த்து கவிதை எழுதுங்கன்னு...ஒன்னாவது இதுவரைக்கும் எழுதிருக்கீங்களா?

MARI The Great சொன்னது…

இவ்வளவு பெரிய வரவேற்ப்பு கொடுத்த உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி! விரைவில் புதிய பதிவொன்று என் வலையில் பதிவேரும்! தவறாமல் வருகை தரவும்!

JR Benedict II சொன்னது…

பதில் பாட்டு

//வருக வருக வரலாறே
வந்து நிறையப் பதிவிடுக!//

இட்டுட்டாலும்..

//பெருகப் பெருக என்றெண்ணி
புதுமை வரவைத் தந்திடுக!//

அவருக்கு குழந்தை பிறக்க போற மேட்டர் தெரிஞ்சுடுச்சா?

//சிறந்த வழியைக் காட்டிடுக!//

அவர் சிக்னல் லைட்டா?

//பழமைத் தமிழ்போல் உயர்ந்திடுக!//

வயச கிண்டல் பண்ற நீயி?

//கருமை கண்ணுக்(கு) அழகாகும்!//

இப்போ கலரு.. வேணாம்

அருமை நண்பர் வரலாற்றை
அருணா அன்பாய் வரவேற்றேன்!//

அடடே

வ.சு. தந்ததை விட எவ்வளவு ரூபா சாஸ்தி தந்தா ஹாரிக்கு ஒரு பாட்டு எழுதுவிங்க கவிதாயினி அவர்களே?

Seeni சொன்னது…

unmai sako!

varalaaru padaippukal-
tharupavar!

ungal azhaippum arumai!

சசிகலா சொன்னது…

அழகான வரவேற்பு. ஏன் எங்களுக்கெல்லாம் இல்லையா சகோ.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

அப்படி அழையுங்கள்... அவர் பதிவை படித்து நாளாகி விட்டது...

நன்றி...
tm6

MARI The Great சொன்னது…

>>>அவருக்கு குழந்தை பிறக்க போற மேட்டர் தெரிஞ்சுடுச்சா?<<<

யோவ்..ஹாரி....நானே ஒரு குழந்தை....ஏன்யா இப்பிடி..ஏன்?

MARI The Great சொன்னது…

ஒரு ஐம்பதாயிரம் என் அக்கௌண்டில் போட்டுவிடுங்கக்கா! சிறப்பா பன்னிருவோம்!

அருணா செல்வம் சொன்னது…

யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார். இருந்தாலும் நீங்களும் என் நண்பர்.... உங்கள் காதில் மட்டும் சொல்கிறேன். அதனால் காதை மட்டும் அனுப்பி வையுங்கள் அரசன்.

நன்றி அரசன்.

அருணா செல்வம் சொன்னது…

ஆமாம் இல்ல...
நான் வெற்றி வாகை பாட்டு பாடியிருக்கனும்...

(ஏதோ பஹ்ரன் பணத்துல தர்ரேன் என்று சொன்னது போல் கனவு கண்டேன். அது இந்திய ரூபாயில் எவ்வளவு என்று தெரியவில்லை.)

அருணா செல்வம் சொன்னது…

அடடடா... அதனால் தான் இப்படி இளைச்சி போயிட்டீங்களா சிட்டு...?

நன்றி சிட்டுக்குருவி.

அருணா செல்வம் சொன்னது…

ரெவெரி சார்... போவட்டும் விடுங்க...

அருணா செல்வம் சொன்னது…

அவரே கேட்டார் பாஸ்.

அருணா செல்வம் சொன்னது…

அந்தச் செண்டு எனக்கு... ஆமா...

நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

ஏற்கனவே மனப்பாடம் ஆக்கிட்டாராம்.

நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

கொடுத்தால் வேண்டாமென்று சொல்ல மாட்டேன் வசு.

அருணா செல்வம் சொன்னது…

நிச்சயமாக வருவேன்.
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

ஹாரி...
ஒரு மடங்கு ஜாஸ்தியா கொடுத்தாலே போதும்.


நன்றி ஹாரி.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி நண்பரே.

அருணா செல்வம் சொன்னது…

வசு... அது “அருணா அக்கௌண்டு“ என்று எழுதியிருக்கனும்.
சசிகலா குழம்பிவிட போகிறார்.

நன்றி சசிகலா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் ஐயா.

மாதேவி சொன்னது…

வரவேற்பு பிரமாதம். வருக...வருக.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

வரலாறுக்கு வரவேற்பு பலமாகத்தான் இருக்கிறது. பாடிய புலவருக்கு பரிசில் கொடுக்கவேண்டும் வ.சு.
முதலில் அவர் பெயரைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

ஆமாங்க ஐயா.
நீங்களே பெயரைக் கேட்டு பாருங்கள். அப்படியே பரிசிலையும் வாங்கி எனக்கு கொடுத்துவிடுங்கள்.

(நான் நினைக்கிறேன் அவர் பெயர் ரொம்ப ரொம்ப நல்லாவே இருக்காது என்று. அதனால் தான் மறைக்கிரார். எதுக்கு வம்பு. நாம் வசு என்றே கூப்பிடலாம்)

நன்றி முரளிதரன் ஐயா.

Admin சொன்னது…

பொறாமை...பொறாமை... :D

Admin சொன்னது…

//அடடே //

மூன்று புள்ளிகளையும், ஆச்சர்ய குறியையும் விட்டுட்டீங்களே!

MARI The Great சொன்னது…

@ அப்துல் பாஸித்

>>>பொறாமை...பொறாமை... :D<<<

கரிக்கிட்டு பாஸ்....

>>>மூன்று புள்ளிகளையும், ஆச்சர்ய குறியையும் விட்டுட்டீங்களே!<<<

சீனு பதிவால ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கீங்க போல.. :) :)