திங்கள், 21 மே, 2012

பொய் சொல்லப் போறேன்...!!
வணக்கம் தோழர்களே தோழியர்களோ...
    அதாவதுங்க எனக்குச் சின்ன வயசுலேர்ந்தே ஒரு கெட்டப் (நல்ல) பழக்கம்ங்க. எதுக்கெடுத்தாலும் பொய் சொல்லுவேனாம். நான் சொல்வதெல்லாம் பொய். பொய்யைத் தவிர வேற ஒன்னுமே இல்லைன்னே தைரியமாகச் சொல்வேனாம்.
    இது இப்படியே இருந்திருக்க... இப்போ நான் எது சொன்னாலும் யாருமே என்னை நம்ப மாட்டேங்கிறாங்க.... என்ன செய்யறதுன்னே தெரியலைங்க.
    இதனால இப்போ என்ன பிரட்சனைன்னு கேக்குறீங்களா....
    அதை ஏங்க கேட்குறீங்க...
    சொல்கிறேன். சொல்லதானே வந்தேன்.
    என்னோட பெயர் “அருணா செல்வம்“
    இந்தப் பெயர் இருப்பதால நான் ஆண்பிள்ளையா..? பெண் பிள்ளையா...? என்ற சந்தேகம் நிறைய பேருக்கு வந்திருக்கிறதுன்னு நினைக்கிறேன்.
    நான் இப்போ உண்மையைச் சொல்லுறேங்க.
    நான் நிஜமாகவே மீசை வைக்காத ஆண்பிள்ளை தாங்க!!
    நான் பிறந்த போது எனக்கு “முத்து அருணாச்சலம்“ என்று தான் பெயர் வைத்தார்களாம். அந்தப் பெயரைப் பதியும் பொழுது “முத்து அருணாச்சல்லம்“ என்று பதிய... கடைசியில் அருணா செல்வம் என்றாகிவிட்டதாம்.
    சின்ன வயதிலிருந்தே எங்கள் குடும்பப்பெயரான (நாங்கள் பிரென்சு நேசனாலிட்டி என்பதால்) “முத்து“ என்றே அனைவரும் கூப்பிட்டதால் எனக்குப் பெரியதாக மாற்றம் தெரியவில்லை.

    ஆனால்...
    ஒருமுறை... நான் எழுதிய நாவலை அறிமுகப்படுத்திய திரு.தமிழ்வாணன் அவர்களின் மகன் திரு. ரவி தமிழ்வாணன் அவர்கள் (அவர் என்னைப் பார்த்ததில்லை.) மேடையில் “நாவலாசிரியர் அருணாசெல்வம் அவர்கள் மேடைக்கு வரவும்“ என்று அறிவித்தார். நானும் போய் நின்றேன். என்னை யாருமே கண்டுக்கவே இல்லை.
    திரு. ரவி தமிழ்வாணன் அவர்களும் மேடையிலே வேறு நிறைய விசயங்கள் பேசிவிட்டுத் திரும்பவும் “நாவலாசிரியர் அருணா செல்வம் மேடைக்கு வரவும்“ என்றார்.  நான் உடனே கையைத் துர்க்கி “நான் தாங்க அருணா செல்வம் என்றேன்“. அவருடைய அதிர்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது.
    உடனே சமாளித்துக் கொண்டு “ஓ.. நீங்கள் தானா...“ என்று பிறகு சாதாரணமாகப் பேச ஆரம்பித்தார். இருந்தாலும் எனக்கு அப்பொழுது கொஞ்சம் நெருடலாகத் தான் இருந்தது.
    இப்பொழுதும் ஒரு நெருடல் தான். இது கொஞ்சம் வேற மாதிரி நெருடல். என்னவென்றால்... நான் ஏதோ வலையிலுள்ள நண்பர்கள் அனைவரையும் ஏமாற்றுவதாக நினைக்கிறார்களே என்று.
    நான் ஏமாற்றவில்லைங்க. ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேங்க... “ஏமாற்ரவங்க இருக்கிற வரைக்கும் ஏமாத்துறவன் ஏமாத்துவான் தாங்க“
    இன்னும் என்னை நீங்க நம்பவில்லை என்றால்...
என்னை நீங்கள்......
தோழா என்றோ
தோழி என்றோ
நண்பா என்றோ
நண்பர் என்றோ
சகோதரா என்றோ
சகோதரி என்றோ
சகோ என்றோ
அருணா என்றோ
செல்வம் என்றோ அல்லது
அருணா செல்வம் என்றோ..... உங்களுக்கு வசதி படுவது போல எழுதுங்கள்.
    எந்த ஒரு கலைஞரும் ரசிகர்களிடம் அன்பையும் பாராட்டையும் தான் எதிர்பார்ப்பார்கள். (அவர்கள் மேஜிக் செய்து காட்டுபவர்களாக இருந்தால் கூட) நானும் அப்படித் தாங்க.
    
    என் வலைக்குள் வந்து படித்த அனைவருக்கும் மிக்க நன்றிங்க.
                     

   

4 கருத்துகள்:

 1. பொய்யில்
  உண்மையான அடையாளம்

  உணமியில் எனக்கு மட்டும்அல்ல
  நிறைய பேருக்கு இந்த சந்துகம் இருந்து

  உணம்மையை சொன்னதுக்கு மிக்க நன்றி தோழரே

  ஒரு பதிவே போட்டுடீங்க அருமை

  என் ..... இது உங்களை மனக் கஷ்டத்தில் உள்ளக்கி இருந்தால் மன்னிக்கவும்

  என்றும் தோழமையுடன்
  செய்தாலி

  பதிலளிநீக்கு
 2. ஆஹா... இந்த விஷயத்தில் நானும் ஆரம்பத்தில் குழம்பியிருந்து அப்புறம் தெளிவா தெளிஞ்சிட்டேனே...

  ஒரு கவிதையை ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் புரிந்து (உங்களைப் பெண் என்று நினைத்ததால் வந்த வினை) பின்னூட்டமிட்டிருந்தேன். அது தவறான புரிதல் என்று நீங்கள் விளக்கியபோதுதான் புரிந்தது. அப்புறம் பெயர் ஏன் இப்படிவைத்துள்ளார் என்று யோசித்தபோது, சரி, சுஜாதா இல்லையா, அவரைப்போல புனைபெயராக வைத்திருக்கலாம் என்று நினைத்திருந்தேன். இப்போது பெயர்க்காரணமும் புரிந்தது. பலருடைய குழப்பம் தீர்த்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. பெயருக்குப் பின்னால் இத்தனை விஷயங்கள் இருப்பதை இப்போது தெரிந்து கொண்டேன். அதுசரி... நீங்க எழுதின நாவல் புத்தகமா வந்திருக்கா மணிமேகலையில... அந்த புத்தகத்தோட பேர் என்ன ப்ரெண்ட்? சொன்னா நாங்க வாங்கிப் படிப்போமில்ல...

  பதிலளிநீக்கு
 4. ஓ...நானும் தோழி என்றே சொல்லியிருந்தேன்.இனியும் என்ன நண்பர்தான் அருணா !

  பதிலளிநீக்கு