முன்ன விலக்கணி!
பாடலில்
நிகழ்காலத்தில் நடக்கும் நிகழ்வினை விலக்கிப் பாடுவது “நிகழ்வினை விலக்கு“ எனப்படும்.
(இது இருக்க அது ஏன்)
உ.
ம்
திருமுகத்தில்
தொங்கி தெளிவின்றி ஆடும்
சுருள்கொண்ட
கார்குழலும் சொல்லும் – அரும்பே
அழகென்று சூட்டினாய்! அஃதிலும் மேலாம்
விழல்போன்ற
கூந்தலன்றோ! வீண்!
பொருள் –
அழகு பொருந்திய முகத்தில் தொங்கி அங்கும் இங்கும் காற்றில் அசைந்து
ஆடும் சுருண்ட கூந்தலும் சொல்லும். மலராத அரும்பை அழகென்று சூட்டினாய்.
ஆனால் அதைவிட அழகானது விழல் போன்ற கூந்தல் தான். அதனால் அந்த அரும்பு வீண்.
பாடலில் கூந்தலில்
சூடிக்கொண்டிருக்கும் மலரைவிட அந்தக்
கூந்தல் மிக அழகாக இருக்கிறது. அதனால் மலர் வேண்டாம் என்று
நிகழ்காலத்தில் நடப்பதை விலக்குவதால் இது “நிகழ்வினை விலக்கு“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
27.05.2019

vanakkam
பதிலளிநீக்கு