புதன், 30 ஜூலை, 2014

சாதிகள் உள்ளதடி பாப்பா....    “சாதி, சாதி என்கிறார்களே... அது எதை வைத்துப் பிரித்திருக்கிறார்கள் மாமா...?“ என்று கேட்ட காமினியை யோசனையுடன் பார்த்தார் மாமா.
    “சாதி என்பது அவரவர் செய்யும் தொழிலை வைத்துப் பிரித்தார்கள் அம்மா“ என்றார் மாமா.
    “அப்படியா....? அப்போ நிறைய சாதி இருக்குமே“
    “ஆமாம்மா. இப்போ அப்படித்தான் ஆகிவிட்டது“
    “எதனால் இப்படி ஆனாது?“ கேள்வி வாயிலிருந்து உதித்தாலும் அவளின் கண்களில் அதை அறியும் ஆவல் இருந்ததைக் கவனித்தார் மாமா.
   “காமினி.... விளக்கமாகச் சொல்கிறேன் கேள். பழைய காலத்தில் ஒவ்வொருவர் செய்யும் தொழிலை வைத்து அதை ஆறு சாதியாகப் பிரித்தார்கள். ஆனால் அதைக்கூட காளமேகப் புலவர் தொழிலை வைத்துப் பார்க்காமல் அதனுள் கடவுளை வைத்துப் பாடி இருக்கிறார்“
   “அப்படியா....? சாதியைப் பற்றி காளமேகப் புலவர் பாடினாரா....? என்னவென்று பாடினார் சொல்லுங்கள் மாமா.....“ கெஞ்சளாகக் கேட்டாள் காமினி.
   “ம். சொல்கிறேன் கேளம்மா“ என்று காளமேகத்தைப் பாடினார் மாமா.
  
கம்மாள னங்கிக் கணக்கனென வேதுதித்தார்
செம்மான் சதுரரைத் திருவரசை – அம்மாகேள்
வாணியனும் பொன்னேரி வாழும்வெள் ளாழனுமே
சேணியனு மன்றே தெரிந்து.

அம்மா கேள் – அம்மையே கேட்பாயாக
வாணியனும்– வாணியைக் கொண்டோனான பிரம்மனும்
பொன்னேரிவாழும் வெள் ஆழனும்  - திருமகளாகிய அழகியைத் தன் மார்பிலே வீற்றிருக்கப் பெற்றோனாகிய பாற்கடலிலே பள்ளிகொள்கின்ற திருமாலும்
சேணியனும் – இந்திரனும்
அன்றே தெரிந்து – அந்நாளிலே (சாதியை அறிந்து கொண்டு) உண்மையை அறிந்து கொண்டு
செம்மான் சதுரரை – சிவந்த மாலையினைக் கொண்ட சதுரரான பெருமானை
திரு அரசை – நடராசப் பெருமானை
கம்மாளன் – கபாலத்தை ஏந்தியவன் என்றும்
அங்கிக் கண் நக்கன் எனவே துதித்தார் -   நெருப்புக் கண்ணாலே சிரித்துப் புரமெரித்தவன் என்றும் வாழ்த்தினார். என்றார்.

   “மாமா.... எனக்குப் புரியும் படி விளக்கமாகச் சொல்லுங்கள்“ என்றாள் காமினி. மாமா தொடர்ந்தார்....

அதாவது
தொழிலைக் குறித்து வந்த சாதிகளான வணியன் (வியாபாரம் செய்வோன்), வெள்ளாழன் (உழவன்), சேணியன் (நெய்வோன்), சதுரன் (அறிஞன்), கணக்கன் (சோதிடன்), வேதியன் (வேதம் கற்றவன்) என்ற ஆறு சதிகளும் மனிதரின் பெயரால் வராமல் கடவுள்களின் பெயரில் பாடி சரி செய்து இருக்கிறார் காளமேகம்.
    “அப்போ.... இந்த ஆறு சாதிகள் இல்லாமல் வந்திருக்கும் மற்ற சாதிகள் எல்லாம் எப்படி வந்தது...?“ ஆச்சர்யமாகக் கேட்டாள் காமினி.
    “மற்ற சாதிகள் எல்லாம் ஒவ்வோர் சாதியிடம் இருந்து வந்த கிளைகள் தான் காமினி. ஆமாம்.... உனக்கு ஏன் இன்று சாதியைப் பற்றிய எண்ணம் வந்தது...?“
    “இன்று பள்ளியில் ஒரு பையன் நீ என்ன சாதி?என்று கேட்டான். நான் பெண்சாதிஎன்றேன். அதற்கு அவன், “ஆமா.... நான் ஆண் சாதின்னா நீ எனக்குப் பெண்ஜாதி தான் என்றான் கொஞ்சம் நக்கலாக. அது தான் உங்களிடம் விளக்கம் கேட்டேன் மாமா“ என்றாள்.
    “நல்ல குறும்புக்கார பையன் தான். அவனிடம் இப்படி சொல்லு. உலகில் ஆண்,பெண் என்று இரண்டு சாதிகள் தான். ஆனால் ஆண்தான் பலசாதிகளில் பிரிந்து கிடக்கிறான். பெண்களுக்குப் பெண்கள் என்ற ஒரே சாதி தான் என்று சொல்லம்மா.....“ என்று சொல்லியபடிச் சிரித்துக் கொண்டே சென்றார்.

அருணா செல்வம்

30.07.2014

33 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

சாதிக்கொரு சவுக்கடி நன்றாக இருக்கிறது சகோதரியே... ஆண்கள் தான் பெயருக்கு பின்னால் சாதீயை மூட்டுகிறார்கள் பெண்கள் அல்லர்.
இனி ஜாதிகள் உள்ளதடி டாப்பா என்று தான் பாடவேண்டும்.

எனது பதிவு பாம்பனிலிருந்து... பாம்பாட்டி.

கும்மாச்சி சொன்னது…

பெண்களுக்கு ஒரே சாதியா? கேட்க நல்லாத்தான் இருக்கிறது.

ஜாதியைப் பற்றிய காளமேகப்புலவரின் பாடலும் விளக்கமும் அருமை.

Avargal Unmaigal சொன்னது…

ஆண்களுக்கு பலசாதி ஆனா எனக்கு மட்டும் ஒரே ஒரு பொஞ்சாதி மட்டும்தான்......அதிர்ஷ்டமில்லாத ஆளுங்க இந்த் மதமிழன்

வருண் சொன்னது…

தேவ கோட்டைக்காரரே!!!

அப்படிங்களா??!!!

நான் இப்போ ப்ரியா ஐயர் (Priya Iyer) னு கூகிள் செய்து பார்த்தேன்.

https://www.google.com/?gws_rd=ssl#q=Priya+Iyer

இதுவும் இந்த ஆம்பளைங்க தப்புத்தான்னு தப்புத் தப்பா சொல்லிக்கிட்டு இருக்காதீங்க, ப்ளீஸ்!

Here is a janani Iyer too!

http://en.wikipedia.org/wiki/Janani_Iyer

”தளிர் சுரேஷ்” சொன்னது…

காளமேக புலவரின் பாடலும் விளக்கமும் சிறப்பு! சாதிகள் பிறந்த விதம் அலசல் அருமை!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

சாதி என்ன என்று கேட்டுத்தான் பள்ளியில் சேர்க்கிறார்கள்
வகுப்பிற்குள் நுழைந்ததும்
சாதிகள் இல்லையடி பாப்பா
என்று சொல்லித் தருகிறார்கள்
நன்றி சகோதரியாரே
படம் அருமை
தம 4

Unknown சொன்னது…

ஜனணி அய்யர் .சமீரா ரெட்டி இதெல்லாம் படித்து வாங்கின பட்டமா ?
த ம 6

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

ஒரு ஜாதியிலிருந்துதான் இன்னொரு ஜாதி பிறந்தது என்பதை அழகாகச் சொன்னீர்கள். ஜாதியின் பெயரை பெயரின் பின்னால் வைத்துக் கொள்வது என்பது ஆணாதிக்கத்தை காட்டுவதாகும். நல்லவேளை பெண்களுக்கு அந்த மரபை உண்டாக்கவில்லை. ஆனாலும் சில சமூகப் பெண்கள் கணவரின் பெயரை விட்டு விட்டு , கணவரின் பெயரோடு வரும் ஜாதியை மட்டும் ஒட்டிக் கொள்கிறார்கள்.

காளமேகம் பாடலுக்கு நல்ல விளக்கம் ரசித்தேன்.
த.ம.7

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
சாதிபற்றி நன்றாக சொல்லியுள்ளீர்கள் அதில் பாடலும் விளக்கமும் நன்று இவற்றை எல்லாம் வகுப்பவன் இந்த மனித சாதிதான்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown சொன்னது…

முடிவில் சொன்னது மிகவும் உண்மை!

Yarlpavanan சொன்னது…

சிறந்த பகிர்வும் பயனுள்ள கருத்தும்
தொடருங்கள்

மாதேவி சொன்னது…

சாதிபற்றி நன்றாக சொன்னீர்கள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சகோதரி! காள மேகப் புலவரின் பாடலும் விளக்கமும் அருமை அதைச் சொல்லியவிதம் இன்னும் அழகு.....

ஆனால் ஒன்றுதான் இடிக்கின்றது.....//ஆண்தான் பலசாதிகளில் பிரிந்து கிடக்கிறான். பெண்களுக்குப் பெண்கள் என்ற ஒரே சாதி தான் //
அப்படிச் சொல்ல முடியவில்லையே இவற்றைப் பார்க்கும் போது.....இதோ....ஐயர், ஐயெங்கார், ரெட்டி, முதலியார் என்று பெண்கள் கணவனின் பெயரைப் போட்டுக் கொள்ளாவிட்டாலும் சாதியின் பெயரைச் சேர்த்துக் கொள்ளுகின்றனரே!

Packirisamy N சொன்னது…

//ஆறு சதிகளும் //

தவறுதலாக எழுதியிருந்தாலும் , இது சரிதான்.

G.M Balasubramaniam சொன்னது…

காள மேகப் புலவர் காலத்தில் சாதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவே......!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கில்லர் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

வருண் சார்.....

பெண்கள் இந்த நாகரீக காலத்தில் இப்படியெல்லாம் முன்னேறி இருப்பது அந்த மாமாவிற்குத் தெரியாது போலும்...
தவிர, நான்.... ஜனனி ஐயரையும் ப்ரியா ஐயரையும் ஆண் என்று தான் நினைத்திருந்தேன்.....(((

தகவலுக்கு மிக்க நன்றி வருண் சார்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

ஒருத்தரிடம் வாங்கும் அடி போதாதா.....?

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி “உண்மைகள்“

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் சொன்னது…

நீங்கள் ஆசிரியர் என்பதால் உங்களின் இந்தக் கருத்து
உண்மையிலும் உண்மையாகத் தான் இருக்கும்....

படத்தை இணையத்திலிருந்து எடுத்தேன் ஐயா.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

வெள்ளைக் காகிதத்தில் வைத்த கரும்புள்ளிகள்..... பார்க்க “பளீச்“ என்று தான் தெரியும்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பகவான் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

பெண்கள் இந்த விசயத்திலும் முன்னேற நினைக்கிறார்களோ....!!!

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

ஆறரிவு இருக்கிறது இல்லையா...? அது தான் “வகுக்கிறான்.“

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ரூபன்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி புலவர் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மாதேவி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

இதோ....ஐயர், ஐயெங்கார், ரெட்டி, முதலியார் என்று பெண்கள் கணவனின் பெயரைப் போட்டுக் கொள்ளாவிட்டாலும் சாதியின் பெயரைச் சேர்த்துக் கொள்ளுகின்றனரே!

இதெல்லாம் பெரிய சாதி இல்லையா....? அதுதான் போட்டு தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்கிறேன் என்று தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறார்கள் .

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

ஆறு சதிகள்.... ஹா ஹா ஹா....

தவற்றை நகைச்சுவையுடன் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி பக்கிரிசாமி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

அப்படித்தான் நானும் நினைக்கிறேன் ஐயா.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பாலசுப்ரமணியம் ஐயா.

KILLERGEE Devakottai சொன்னது…

வருண் அவர்களுக்கு... தாங்கள் சொல்வது உண்மைதான் எனது கருத்து தவறாக போய் விட்டது எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

வருண் சொன்னது…

****எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.****

"எல்லாம் தெரிந்த ஏகாம்பரமா??" :))))

உங்களுக்கு ஏன் என் மேலே இந்தக் கொலை வெறி, கில்லர்ஜீ??? :=)))

நான் தவறாக ஏதாவது சொல்லும்போது நீங்க வந்து என்னை சரி செய்யுங்கள். I do make mistakes everyday!

----------------**************------------------------

***தகவலுக்கு மிக்க நன்றி வருண் சார்.***

அருணா அவர்களே:

இந்த ஆம்பளைங்கதான் இப்படி சாதியைக் கட்டிக்கிட்டு அலைகிறானுகள்னா, நம்ம தாய்க்குலங்களும் ஏன் இப்படினு எனக்கும் ரொம்ப வருத்தம்தான். :((

தமிழ்ப்பெண் வலைபதிவர் ஒருத்தர் தன்னை "ஹையங்கார்"னு சொல்லிக்கொண்டதெல்லாம் உங்களுக்கு தெரியும்தானே? :))) என்னவோ போங்க!

கார்த்திக் சரவணன் சொன்னது…

ஜாதிகள் இரண்டொழிய வேறில்லை.....