வெள்ளி, 11 ஜூலை, 2014

ஓடி வந்து தழுவி விடு!

நட்புறவுகளுக்கு வணக்கம்.

   இந்தப்பாடலில் கடைசில் நான் புள்ளி வைத்த இடத்தை நிரப்பினால் தான்  பாடல் முழுமை பெறும். (நான் யாரைத் தழுவிட அழைத்தேன் என்பது தெரியும்)
   விருப்பப்பட்டவர்கள் அந்த மூன்றெழுத்துச் சொல்லை நிரப்பலாம். தெரியவில்லை என்றால்.... தெரியவில்லை என்றாவது கருத்திடுங்கள். பத்துக்கு மேல் கருத்துக்கள் வந்ததும் வெளியிடுகிறேன்.

நன்றிஓடி வந்து தழுவி விடு!

பல்லவி

ஓடி வந்து தழுவி விடு! – என்னைக்
கூடி உடன் களித்து விடு!

அநுபல்லவி

தேடி உன்னை அழைக்கின்றேன்! – தேவி
தேகம் புகுந்து உலகை மறக்கவிடு!

சரணங்கள்

உறவில் ஆயிரம் தொல்லையம்மா! – வரும்
வரவும் சேர்வ தில்லையம்மா!
நிரந்தர வேலை இல்லையம்மா! – நிதம்
இரவினில் நீவர வில்லையம்மா!         (ஓடி)

ஏழைகள் இடத்தில் இருக்கின்றாய்! – வெறும்
கோழைகள் இடத்திலும் இருக்கின்றாய்!
காரணம் இன்றியே என்னிடத்தில் –வந்து
கட்டித் தழுவாமல் இருக்கின்றாய்!        (ஓடி)

தேக்கங்கள் பற்பல இருந்திடட்டும்! – நெஞ்சில்
ஏக்கங்கள் ஆயிரம் இருந்திடட்டும்!
தாக்கங்கள் உள்ளத்தில் இருந்தாலும் - நல்ல
ஊக்கத்தைத் தந்திட வந்திடம்மா!        (ஓடி)

துன்பங்கள் வந்தே போனாலும் – வளர்
இன்பத்தில் மனமோ திளைத்தாலும்
தின்றிடும் உணர்வு கரைந்தாலும் – ---------
தேவியே நீவர வாழ்வேனம்மா! –       (ஓடி)

அருணா செல்வம்

10.07.2014

54 கருத்துகள்:

 1. வணக்கம்
  பாடல் மிக அருமையாக உள்ளது ..நான் விடை கூறவில்லை மற்றவர்கள் விடையை எதிர்பார்க்கிறேன் பகிர்வுக்கு நன்றி
  த.ம 1வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏங்க இப்படி?

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. சரியாக பதில் ஐயா.

   என்ன துர்க்கத்தை இவ்விடத்தில் “நித்ரா“ என்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

   தங்களின் வருகைக்கும் சரியான பதிலுக்கும்
   மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 3. பதில்கள்
  1. மிகச் சரியான சொல்.

   (அதுக்கு ஏன் இவ்வளவு சிரிப்பு...?)
   தங்களின் வருகைக்கும் சரியான பதிலுக்கும்
   மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.


   நீக்கு
 4. பதில்கள்
  1. இந்தப் பாடலை என் கணவர் எழுதி இருந்தால்
   நீங்கள் சொன்ன பதில் சரியானதாக இருந்திருக்கும்.

   நான் எழுதிய பாடல் என்பதால் உங்களின் பதில் தவறு “உண்மைகள்“

   நீக்கு
 5. கருத்து
  --------------
  பத்து


  நல்லா பாருங்க பத்துக்கு மேலே கருத்து இருக்கா... இப்ப பதில் சொல்லுங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பத்துக்கு மேல் புள்ளிகள் இருந்தால் என்று நான் எழுதவில்லையே....

   நீக்கு
 6. சிறந்த பாடல்

  "தேக்கங்கள் பற்பல இருந்திடட்டும்! – நெஞ்சில்
  ஏக்கங்கள் ஆயிரம் இருந்திடட்டும்!
  தாக்கங்கள் உள்ளத்தில் இருந்தாலும் - நல்ல
  ஊக்கத்தைத் தந்திட வந்திடம்மா! (ஓடி)" என்ற
  அடிகளை விரும்புகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் சரியான பதிலுக்கும்
   மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

   நீக்கு
 8. அமைதி என்பதை நான் ஆர்ப்பாட்டமின்றி கூறிக் கொள்கிறேன் !
  த ம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்ம்.... அமைதியும் தேவை தான்.
   ஆனால் அமைதியைத் தழுவிட
   யாரும் அதை அழைப்பதில்லையே.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி பகவான் ஜி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. சரியான பதில்.

   தங்களின் வருகைக்கும் சரியான பதிலைத் தந்தமைக்கும்
   மிக்க நன்றி மூங்கில் காற்று.

   நீக்கு
 10. தூக்கமாக இருக்கலாம் ஆனால் அதன் மூன்று எழுத்து தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துாக்கம் என்பது தான் மிகச் சரியான தமிழ் சொல்.
   ஆனால் பொதுவாக நித்திரை என்பதை பெண் என பாவித்து நித்ரா தேவி என்பார்கள்.

   அதனால் நீங்கள் சொன்ன பதிலும் சரிதான் அம்மா.
   மிக்க நன்றி.

   நீக்கு
 11. நித்ரா? தவறு என்றால் தெரிந்து கொள்கின்றோம்! முதலில் "நிதம்
  இரவினில் நீவர வில்லையம்மா!" பார்த்தவுடன் நிலவு? என்று நினைத்தோம். ஆனால் அர்த்தம் சரிப்படவில்லை...மற்ற சொற்கள்...உறக்கம், நித்திரை என்று யோசித்தபோது 4 எழுத்துக்கள்...ஆனால் நாங்கள் நித்ரா தேவி வரலைய இன்னும் அப்படினு கேட்பதுண்டு அதை வைத்து நிரப்பி உள்ளோம்! கனவு கூட சரியோ என்று தோன்றியது ஆனால் அதுவும் பொருள் கொஞ்சம் உதைத்தது.....ஸோ நித்ரா.....சரியா சகோதரி?

  கவிதை அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐய்ய்ய்யோ... இவ்வளவு யோசித்தீர்களா.....

   நான் உண்மையில் எனக்குத் துாக்கம் வரவில்லை என்று இந்தப் பாடலை எழுதினேன். நானும் அந்தப் புள்ளி இட்ட இடத்தில் நித்ரா“ என்றே எழுதித்தான் வெளியிட வந்தேன். ஒரு மாறுதலாக இரக்கட்டுமே என்று அவ்விடத்தில் புள்ளிகளை வைத்து கேள்வியாகக் கேட்டு விட்டேன்.

   நிச்சயம் இது கடினமாக் கேள்வி கிடையாது என்பது எனக்கு தெரியும். வந்த அனைவருமே சரியான பதிலைத்தான் தந்தார்கள். நீங்களும் தான்.
   ஆனால் இந்தக் கேள்விஇப்படியெல்லாம் யோசிக்க வைக்கும் என்று நினைக்கவில்லை.

   நித்ரா தான்.

   நன்றி துளசிதரன் ஐயா.

   நீக்கு
 12. நித்ரா - தேவி சரியாக இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 13. மிக அழகான பாடல். அருமை!
  வாழ்த்துகிறேன் தோழி!

  விடுபட்ட சொல் எனக்கு நான்கு எழுத்தில் வருகிறது.
  இங்கு நித்திரை பொருந்துமோ..

  // நிரந்தர வேலை இல்லையம்மா! – நிதம்
  இரவினில் நீவர வில்லையம்மா!

  ஏழைகள் இடத்தில் இருக்கின்றாய்! – வெறும்
  கோழைகள் இடத்திலும் இருக்கின்றாய்!//

  பாடலின் இந்த அடிகளில் என்னிடத்தில் இல்லாது
  இதுதான் என என் மனம் நினைத்தது.

  விடைக்குக் காத்திருக்கின்றேன்...:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நித்திரை தான் தோழி.

   பொதுவாக இதை நித்ரா தேவி என்பார்கள். அதனால் மூன்றெழுத்து என்று எழுதிவிட்டேன்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 14. தின்றிடும் உணர்வு கரைந்தாலும் – காதல்,நிலவு,அன்பு,
  தேவியே நீவர வாழ்வேனம்மா!

  இதில் ஏதாவது ஒன்றா...? தெரியவில்லை.
  பாடல் அருமை. நன்றி சகோதரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட இதையெல்லாம் வைத்தாலும் கூட நன்றாகத் தான் இருக்கும்.
   ஆனால் “நித்ரா“ தேவி என்பது தான் இக்கவிதைக்குப் பொருந்தும்.
   நன்றி சகோதரி.

   நீக்கு
 15. பதில்கள்
  1. துயில் - உறக்கம்..... சரியான விடையே

   தங்களின் வருகைக்கும் பதிலுக்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 16. பாடல் ரொம்ப ரொம்ப அழகு
  ஏழைகள் இடத்தில் இருக்கின்றாய்! – வெறும்
  கோழைகள் இடத்திலும் இருக்கின்றாய்!
  காரணம் இன்றியே என்னிடத்தில் –வந்து
  கட்டித் தழுவாமல் இருக்கின்றாய்! அனைத்தையும் நன்றாக ரசித்தேன். இந்த வரிகளுக்கு இது தான் பொருந்தும் என்று நினைக்கிறேன்.
  துயில்தேவி வராது துகில் தேவி சரியாக இருக்கலாம். ஆமா எங்கே விடை இன்னும் ஒரு பத்துக்கு வெயிட்டிங்கா. வாழ்த்துக்கள்....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனியா அம்மா.... ஏன் இந்தக் குழப்பம்?

   துயில் என்றால் உறக்கம், நித்திரை, துர்க்கம்,

   துகில் என்றால் உடுத்தும் உடை. துணி.

   சரியான விடை நித்ரா தேவி.

   பொதுவாக துர்க்க தேவியை, உறக்க தேவியை, துயில் தேவியை தழுவினோம் என்று சொல்ல மாட்டார்கள். நித்ரா தேவி தழுவினாள் என்று தான் சொல்வார்கள். அதனால் “நித்ரா தேவி“ என்பதே சரியான விடை.

   இங்கே கருத்திட்ட அனைவருமே சரியான பதிலைச் சொல்லி விட்டதால் நான் சற்று தாமதமாகவே வந்தேன்.

   நன்றி இனியா அம்மா.

   நீக்கு
 17. விரைவில் சொல்லிடுங்க "நித்ரா" தேவி...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் என்னண்ணா சொல்வது...

   அதுதான் அனைவருமே சொல்லிவிட்டார்களே....

   நன்றி தனபாலன் அண்ணா.

   நீக்கு
 18. நித்ரா தேவி தானே...

  இல்ல அருணா தேவியா அக்கா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நித்ரா தேவி தான் குமார்.

   அருணா தேவியைத் தான் அது தழுவ வருவதில்லை.

   நன்றி குமார்.

   நீக்கு
 19. 'என்றன்' அல்லது 'எந்தன்' என்ற சொல் வந்தால் சரியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா.... உண்மையில் நீங்கள் தந்த வார்த்தைகளும் அங்கே அழகாகக் பொருந்தும்.

   ஆனால்...
   ஏழைகள் இடத்தில் இருக்கின்றாய்! – வெறும்
   கோழைகள் இடத்திலும் இருக்கின்றாய்!

   இந்த வரிகளில் இடிக்குமே....

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி செல்லப்பா ஐயா.

   நீக்கு
 20. பத்து கருத்துக்கு மேல் வந்தா பதில் சொல்லுறேனுன்னு சொல்லி சொன்ன வாக்கை காப்பாற்றாமல் இருக்கும் அருணா செல்வத்திற்கு எதிராக அகில உலக பதிவர்கள் சார்பாக கடும் கண்டங்கள் இங்கே தெரிவிக்கப்படுகின்றன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னாதுதுதுதுதுது.....

   பத்து கருத்துக்கு மேல் வந்தால் பதில் சொல்கிறேன் என்றா எழுதி இருக்கிறேன்....

   நல்லா பாருங்கள்.
   பத்துக் கருத்துக்களுக்கு மேல் வந்ததும் (கருத்துக்களை) வெளியிடுகிறேன்“ என்று தான் எழுதி இருக்கிறேன்.

   இப்பொழுது சொல்லுங்கள்... இது யார் தவறு?

   இப்ப என்ன சொல்லுவீங்க?
   இப்ப என்ன சொல்லுவீங்க?

   நீக்கு
 21. பெருவாரியானவர்கள் சொன்னது
  சரியெனத்தான் படுகிறது
  அருமையான கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாங்க இரமணி ஐயா.
   எல்லோருக்கும் தெரிந்தவள் தானே...

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி இரமணி ஐயா.

   நீக்கு
 22. தாமதமாகவே வரநேர்ந்தது சகோதரி!
  போட்டியில் கலந்து கொள்ள இயலாமைக்கு நிச்சயமாய் வருத்தமுண்டு!
  என்ன செய்ய? பலவற்றை இப்படித் தவறவிட்டு விடுகிறேன்!
  பாடல் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போட்டியா....? அதெல்லாம் இல்லை ஐயா.
   சும்மா ஒரு ஜாலிக்காகத் தான்.

   நீங்கள் தாமதமாக வந்தாலும் தவறாமல் வந்தீர்களே....
   இது போதும் ஐயா.
   தொடர்ந்து வந்து ஊக்கப்படுத்துங்கள்.
   நன்றி “ஊமைக்கனவுகள்” ஐயா.

   நீக்கு
 23. உறக்கம் வராமல் தவிக்கும் ஓர் ஆத்மாவின் உள்மன ஏக்கத்தை அற்புதமாய்க் காட்சிப்படுத்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் எனக்கு வந்த அனுபவம் தாங்க.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி நம்பி ஐயா.

   நீக்கு
 24. "உறக்கம்" தான் அந்த மூன்றெழுத்து சரியா ஆசிரியையே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆசிரியை..... ஹா ஹா ஹா.... நான் ஆசிரியை இல்லை அண்ணா.

   உறக்கத்தின் மற்றொரு பெயர் நித்திரை என்பது தான் நித்ரா என்று சுறுக்கி வரும்.

   சரியான பதில் கும்மாச்சி அண்ணா.
   நன்றி.

   நீக்கு

 25. வணக்கம்!

  துாக்கத்தைத் தேடியே துாண்டிலிடும் பாட்டினில்
  ஏக்கத்தைக் கண்டேன் இழைந்து!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாடலுக்கும்
   மிக்க நன்றி கவிஞர்.

   நீக்கு