புதன், 9 ஜூலை, 2014

வணங்க வேண்டிய திருவடிகள்!!திருவடியைத் தேடிநின்றேன்! தீமை யில்லாத்
    தெய்வமாகத் தெரிந்ததென்றன் தாயின் அன்பு!
கருவறைக்குள் இருந்தபோதும் கருணை நெஞ்சம்!
    கலிகாலம் காணுலகில் பிறந்த போதும்
ஒருவேலை தவறாமல் உண்ணத் தந்தும்
    ஓயாமல் கண்விழித்தும் காத்த தெய்வம்!
திருவருளால் கிடைத்திட்ட தாயை என்றும்
    தெய்வத்தின் திருவடியாய் வணங்க வேண்டும்!!கூட்டினிலே வாழ்ந்துவந்த குருவி போலக்
    குடல்நடுங்கி அடிமையாக வாழ்ந்தோம் அன்று!
ஏட்டினிலே பெயர்பேசும் அளவில் நன்றே
    திசையெட்டும் பார்த்திடவே உயர்ந்தோம் இன்று!
நாட்டினிலே நமக்காக உரிமை வேண்டி
    நல்லவல்ல சுதந்திரத்தை வாங்கித் தந்த
தீட்டிவைத்த வைரமான தியாக நெஞ்சைத்
    தெய்வத்தின் திருவடியாய் வணங்க வேண்டும்!!ஏழையாக இருந்தாலும் தவறே இல்லை!
    ஏமாற்றும் கயவர்கள் சொல்லைக் கேட்டு
கோழையாக வாழ்ந்துவந்த பெண்கள் இன்று
    கோதாவில் இறங்கவுமே தயங்க வில்லை!
வாழையடி வாழையாக வாழ்ந்த அவளை
    வளமான பகுத்தறிவு வழியைக் காட்டித்
தாழாமல் தலைநிமிர வைத்த அந்தத்
    தலைவரையும் திருவடியாய் வணங்க வேண்டும்!!உருமாறி வளர்ந்தாலும் உலகைக் காண
    ஓயாமல் கற்கின்றோம் உவகை கொண்டு!
குருவளித்த போதனையால் உருகும் நெஞ்சம்!
    குழப்பத்தால் வருங்கோபம் குலைந்து போகத்
திருக்குறளின் இருவடியைப் படித்தால் போதும்!
    தெளிவான மனமமைந்து உயரும் வாழ்க்கை!
திருக்குறளின் அடிகளையே உலகில் என்றும்
    தெய்வத்தின் திருவடியாய் வணங்க வேண்டும்!!

அருணா செல்வம்.


2010-ல் எந்தெந்த திருவடியை வணங்க வேண்டும் என்ற கேள்விக்கு நானெழுதிய பதில்.

34 கருத்துகள்:

Yarlpavanan சொன்னது…

"திருக்குறளின் அடிகளையே உலகில் என்றும்
தெய்வத்தின் திருவடியாய் வணங்க வேண்டும்!!" என்ற
உண்மை வரவேற்கிறேன்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

திருவடியை வணங்குவோம்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 1

ஸ்ரீராம். சொன்னது…

நாங்களும் வணங்குகிறோம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கோதாவில் இறங்கி அட்டகாசமாக எழுதி உள்ளீர்கள்... முடித்த விதம் வெகு சிறப்பு...

பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் சகோதரி...

Avargal Unmaigal சொன்னது…

படிச்சிட்டேன் படிச்சிட்டேன்.......

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

கவிதை அருமை

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான பதில் கவிதை! சகோதரி! திருக்குறளைப் போன்ற வாழ்வியல் தத்துவம் முழுவதும் அடங்கிய ஒரு நூல் வேறு ஏதேனும் மொழியில் உண்டா என்று எங்கள் சிற்றறிவுக்குத் தெரியவில்லை! தெய்வப்புலவர்தான் அவர்! உலகமறைதான் திருக்குறளும்! மிகையே அல்ல! எனவே தமிழ் மொழி அன்னை மிகமிகப் போற்றப்படவேண்டியவள்! படங்கள் அருமை!

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான பவடிகள் வாழ்த்துக்கள் தோழி !
த .ம .6

கும்மாச்சி சொன்னது…

அருமையான கவிதை, உண்மை திருக்குறள் தெய்வத்திருமறை என்பதில் ஐயம் இல்லை. போற்றுவோம்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

திருக்குறளை சிறப்பித்த கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
கவிதை அருமையாக உள்ளது உண்மையில் வணங்க வேண்டிய தெய்வங்கள்தான்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இளமதி சொன்னது…

வணக்கம் தோழி..நலமா?

//திருவடியைத் தேடிநின்றேன்!//..
முதலாம் விருத்தத்தில் நீங்கள் சொன்ன
திருவடி மறைந்து தொலைந்து விட்டதே எனக்கு...
சென்ற நான்கு மாதங்களாக...:(

அனைத்தும் அருமை!
உளமார வாழ்த்துகிறேன் தோழி!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

படிச்சிட்டீங்களா..... ராணியா? தேவியா? கல்கியா? குமுதமா...?

பி ஏ வா?, எம் ஏ வா?.....

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி முனைவர் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

Avargal Unmaigal சொன்னது…

நானெல்லாம் கைனாட்டு கேசுங்க அதனால பி ஏ ?, எம் ஏ ?. எல்லாம் நமக்கு கனவுதாங்க

நான் படிச்சுட்டேன் என்று சொன்னது ராணி,தேவி மனசை மட்டும்தானுங்க...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

வணங்கவேண்டிய திருவடிகளை கவிதையால் வணங்கியது மிக சிறப்பு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

பொருள் பொதித்த பாக்கள்- மிக ரசித்தேன்.
//ஒருவேலை தவறாமல் உண்ணத் தந்தும்// - இங்கு "ஒருவேளை" என வருமோ?!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ரூபன்.

அருணா செல்வம் சொன்னது…

மறைந்து தொலைந்து விட்டதா.....???

புரியவில்லை....

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.

அருணா செல்வம் சொன்னது…

ஆமாம்... ஆமாம.... ஒரு வேளை என்று தான் வரவேண்டும்.

எழுத்துப் பிழை, சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி யோகன் ஐயா.

Iniya சொன்னது…

தீட்டிவைத்த வைரமான தியாக நெஞ்சைத்
தெய்வத்தின் திருவடியாய் வணங்க வேண்டும்!!

அருமை அருமை அனைத்தும் உண்மை தான் நன்றி!
தொடர வாழ்த்துக்கள்....!

இளமதி சொன்னது…

// மறைந்து தொலைந்து விட்டதா.....???//

தோழி.. தொலைந்தது என்று இங்கு நான் குறிப்பிட்டது
கையில் இருந்தது நழுவிக் காணாமல் போயிற்று என்னும் பொருளில்...

என் அம்மாவின் திருவடி தொட்டு வணங்க முடியாமல் மறைந்துவிட்டது என்னும் ஆதங்கத்தில் அப்படி எழுதிவிட்டேன்.
பொருள் குழப்பமாகியமைக்கு மனம் வருந்துகிறேன்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வணங்க வேண்டிய திருவடிகள்.....

அருமை.