திங்கள், 1 அக்டோபர், 2012

வால் ஆட்டும் நாய் !! (கவிதை)

ஓடுகின்ற காலத்தில் கொடுப்பார் யாரோ?
   உட்கார்ந்து சிந்தித்தேன்! வாழ்வில் சிக்கி
வாடுகின்ற பொழுதினிலே தேடி வந்து
   வருங்கண்ணீர் துடைக்கின்ற உயர்ந்த நட்பு!
தேடுகின்ற பொருள்கேட்பார்! கொடுத்த பின்பு
   தெரியாத நபரைப்போல் தெருவில் செல்வார்!
ஆடுகின்ற வாலாட்டி அன்பைக் காட்டும்
   ஆண்டுபல கடந்தபின்னும் முகத்தைக் கண்டே!!


அருணா செல்வம்.

26 கருத்துகள்:

சசிகலா சொன்னது…

நன்றி மறவாமை நாய் மட்டுமே.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விலங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன...

கும்மாச்சி சொன்னது…

அருமையான கவிதை.

ஹேமா சொன்னது…

மனிதரை விட அன்பான உறவு நாயார் !

Seeni சொன்னது…

ada ..


JR Benedict II சொன்னது…

ஓகே ஓகே ஆயா சாரி அக்கா ச்சே தங்கை எப்படிங்க சொல்றது.. கவிதைல வயது தெரியல நாய் தான் தெரியுது..

//
வாடுகின்ற பொழுதினிலே தேடி வந்து
வருங்கண்ணீர் துடைக்கின்ற உயர்ந்த நட்பு!//

இந்த பகுதில யார சொல்றிங்க என்று புரியல

MARI The Great சொன்னது…

நன்றி மறந்த மனிதனை விட நாய்கள் மேலடான்னு..தமிழ் படத்துல ஒரு பாட்டு இருக்கு அதுதான் எனக்கு இப்போ ஞாபகத்திற்கு வருது!

நல்ல கவிதை.....கவிதாயினி! :)

பெயரில்லா சொன்னது…

''...ஆடுகின்ற வாலாட்டி அன்பைக் காட்டும்
ஆண்டுபல கடந்தபின்னும் முகத்தைக் கண்டே!!...


பாதிப்பு எழுதப்பட்டுள்ளது.
வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.


முத்தரசு சொன்னது…

அருமையா சொன்னீங்க இன்றைய உலகை

செய்தாலி சொன்னது…

கண்டிப்பா
நன்றியுள்ளது அது அம்ட்டுதான்

அருணா செல்வம் சொன்னது…

அது என்னமோ... உண்மை தான் தோழி.

அருணா செல்வம் சொன்னது…

நீங்கள் சொல்வது உண்மைதாங்க ஐயா.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி கும்மாச்சி அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

சரியாக சொன்னீர்கள்...
என் இனிய தோழி ஹேமா.

அருணா செல்வம் சொன்னது…

ஆமாங்க. இதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை நண்பரே.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் ஹாரிபேட்டர் அண்ணா.
//
வாடுகின்ற பொழுதினிலே தேடி வந்து
வருங்கண்ணீர் துடைக்கின்ற உயர்ந்த நட்பு!//

இந்த இடத்தில் உண்மையான நட்பைத் தான் சொன்னேன்.
ஆனால்...
அந்த நட்பும் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் மட்டும் தான் சொல்லும்.
(பணம்கிணம் கொடுத்துப் பாருங்கள்...)
“கடன் அன்பை முறிக்கும் “

“ஓகே ஓகே ஆயா சாரி அக்கா ச்சே தங்கை எப்படிங்க சொல்றது..“
உங்க ஊருல எல்லாம் உங்களை விட சிறியவர்களை ஆயா, அக்கா என்பார்களா...?
எங்க ஊரில் பெயர்விட்டு தான் அழைப்பார்கள்.

“கவிதைல வயது தெரியல நாய் தான் தெரியுது..“
அதுவும் நல்லது தான். நாய் நன்றியுள்ளதாம். அதனால் நாய் என்றே என்னை அழையுங்களேன் தோழா.

அருணா செல்வம் சொன்னது…

நல்ல பாடலை ஞாபகப் படுத்தினீர்கள் வசு.
நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

புரிதலுக்கு மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம்.

அருணா செல்வம் சொன்னது…

புரிதலுக்கு நன்றி மனசாட்சி.

அருணா செல்வம் சொன்னது…

உண்மைதாங்க தோழரே.

நன்றி.

JR Benedict II சொன்னது…

இருந்தாலும் அக்காவுக்கு (ரீட் விட் வடிவேல் ஸ்லாங்) இவ்வளவு .. இவ்வளவு .. இவ்வளவு கோவம் கூடாது

அருணா செல்வம் சொன்னது…

நண்பர்களிடம் நான் கோபப்படுவது இல்லை ஹாரி.
நானும் ஒரு ஜாலிக்காகத்தான் எழுதினேன்.

மற்றபடி நாம் பால் இலக்கணம் மறந்த ப்ரென்ட்ஸ்.

JR Benedict II சொன்னது…

லா லா லே லா லா..

ஆத்மா சொன்னது…

புரியாத கவிதையா இருக்கே......

அருணா செல்வம் சொன்னது…

சிட்டுக்குருவி... உண்மையில் புரியவில்லையா....?

மேலோட்டமாக விளக்குகிறேன்.

நன்றி என்ற சொல் இருக்கிறது இல்லையா...? அதன் பொருள் என்ன என்பதின் கேள்விக்கு என்னுடைய பதில் இந்த பாடல்.

ரொம்ப கஷ்டத்தில் நாம் இருக்கும் பொழுது நம் துன்பத்தால் வழியும் கண்ணீரைத் துடைப்பவர்கள் உயர்ந்த மனம் படைத்த நண்பர்கள் மட்டுமே.

ஒருசிலர் நம்மிடம் தனக்குத் தேவையான நேரத்தில் நம்மிடம் ஏதாவது கேட்டு நாமும் கொடுத்து விட்டப்பிறகு...
அவருக்கு நம்மீது எந்த அக்கரையும் இல்லாதவர் போல் நம்மைத் தெரியாவர் போல் தெருவில் பார்த்தும் பார்க்காதது போல் செல்வார்கள்.

ஆனால் நாய்.... என்றைக்கோ நாம் அதற்கு ஒரு தின்பண்டத்தைக் கொடுத்தோம் என்றாலும் பல ஆண்டுகள் கழித்து அந்த நாய் நம்மைப் பார்த்தாலும் வாலாட்டி தன் அன்பை நன்றினைய்க் காட்டும்.
இது தான் பாடலின் பொருள்.

நன்றி சிட்டுக்குருவி. அதிக வேலையாக இருந்ததால் உங்கள் கெள்விக்கு நான் அதிக காலம கழித்து பதில் சொல்லி இருக்கிறேன். மன்னியுங்கள்.

k.vivekananthan சொன்னது…

அருமையான கவிதை