வியாழன், 11 அக்டோபர், 2012

கண்டிப்பதும் கடமையே!! (புதுக் கவிதை)
சுட்டு எடுத்து
அடித்தால்
தான் தெரியும்
இரும்பிற்குள்
இருக்கும்
இன வடிவங்கள்!

உளி கொண்டு
செதுக்கினால்
தான் தெரியும்
கல்லுக்குள்
இருக்கும்
கற்சிலைகள்!

எடுத்து வைத்துத்
தட்டினால்
தான் தெரியும்
மேளத்தின்
உள்ளிருக்கும்
மங்கல தாளங்கள்!

ஒழுங்கான
உருபெற்று
உயர்வடிவம்
பெறுவதற்கே
ஒழுங்கற்ற
பொருளெல்லாம்
அடிவாங்கி
உயர்கிறது!

உள்ளுக்குள்
உனை வைத்து
ஊர்ப்புகழா
விட்டாலும்
உருப்படியாய்
நீ வளர
கண்டித்து
அடிக்கின்றார்
உன் அப்பா!

கண்டிப்பு என்பது
கடமையில்லை
அவருக்கு!
காத்திருக்கும்
காலத்தில்
கவித்துவமாய்
நீ வாழ
அவர் காட்டும்
உள் துடிப்பு!!அருணா செல்வம்.

26 கருத்துகள்:

 1. நோக்கத்தை அறிந்து விட்டால்
  செயல்களினால் விளையும் கோபம்
  நிச்சயம் விலகி விடும்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. கண்டிப்பு என்பதே கூடாது என்பது இன்றைய நிலை. அது தேவை என்பதை அழகான கவிதையாக மிளிர்ந்திக்கிறது.உவமைகள் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெற்றவர்களுக்குத் தான் தெரியும் பிள்ளையின் அருமை இல்லைங்களா?

   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி முரளிதரன் ஐயா.

   நீக்கு
 3. அருமையான வார்த்தைக்கோவை கண்டிப்பு மிகவும் அவசியம் என்பதை சொல்லும் கவிதை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி தனிமரம்.

   நீக்கு
 4. ''...காத்திருக்கும்
  காலத்தில்
  கவித்துவமாய்
  நீ வாழ
  அவர் காட்டும்
  உள் துடிப்பு!!...''

  நல்ல வரிகள்.
  நல்வாழ்த்து.
  வேதா.இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி கோவைக்கவி.

   நீக்கு
 5. நிச்சயமான புதுக்கவிதைதான்

  பதிலளிநீக்கு
 6. அருமை சகோ நன்றிகள் பல பல எங்க பக்கமும் வந்து போறது

  பதிலளிநீக்கு
 7. மாவிற்குள்
  தண்ணீரையும்
  பட்டரையும்
  போட்டு
  மெதுவாக
  பிசைந்தால்
  தான்
  வெளிவரும்
  ருசியான
  ரொட்டி

  (யாரப்பா அது? ரொட்டிய கூட சுட்டு தான் எடுக்கணும் என்கிற ஹி ஹி )

  வாழ்த்துக்கள்.. நல்லா இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாரிபாட்டர்....

   சங்கு சுட்டாலும் வெண்மை தரும்...!

   நல்லா எழுதுறீங்க ஹாரி. உண்மையில் நான் உங்களை வாழ்த்துகிறேன்.
   நன்றி.

   நீக்கு
 8. கவித்துவமாய் வாழ அழகிய வரிகள் சகோ.

  தங்கள் பேட்டியையும் படித்து மகிழ்ந்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி சசிகலா.

   நீக்கு
 9. தேவையான நேரத்தில் கண்டிப்பாக வேண்டும் கண்டிப்பு... (முதலில் நமக்கு...) (TM 4)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சிறு வயது பிள்ளைகளுக்குச் சொன்னேன் தனபாலன் ஐயா.
   உங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி.

   நீக்கு
  2. "சுட்டு எடுத்து
   அடித்தால்
   தான் தெரியும்
   இரும்பிற்குள்
   இருக்கும்
   இன வடிவங்கள்!"---------பொற்சிலை என்ற தலைப்பில் ஒரு பதிவினை தாயார் செய்து வருகிறேன். பார்க்க நாளை என் தாமரை மதுரையில். வாழ்க.

   நீக்கு
 10. அருமையான வாக்கியத்துடன் அமைந்த கருத்திற்கும்
  வாழ்த்திற்கும் மிக்க நன்றி இரமணி ஐயா.

  பதிலளிநீக்கு
 11. பதிவு போய்
  சேர வேண்டியவர்களுக்கு
  போய்சேரவேண்டும்

  கண்டிப்பு உறவுகளை
  துண்டிக்கும் அளவிற்கு
  போகாத வரை உரிய
  பயன் தரும்

  தற்காலத்தில் கண்டிப்பு
  வெறும் கண்துடைப்பாக
  இருப்பதால்தான்
  விபரீதங்கள் நடக்கின்றன

  எனினும் கண்டிப்பு
  பற்றிய பதிவிற்கு
  கண்டிப்பாக
  கண்டனக்குரல்கள்
  எழும்

  அதை அரசியல்வாதிகள் போல்
  கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்.
  அவைகள் கால வெள்ளத்தில்
  கரைந்து போய்விடும்

  பதிலளிநீக்கு
 12. பதிவு போய்
  சேர வேண்டியவர்களுக்கு
  போய்சேரவேண்டும்

  கண்டிப்பு உறவுகளை
  துண்டிக்கும் அளவிற்கு
  போகாத வரை உரிய
  பயன் தரும்

  தற்காலத்தில் கண்டிப்பு
  வெறும் கண்துடைப்பாக
  இருப்பதால்தான்
  விபரீதங்கள் நடக்கின்றன

  எனினும் கண்டிப்பு
  பற்றிய பதிவிற்கு
  கண்டிப்பாக
  கண்டனக்குரல்கள்
  எழும்

  அதை அரசியல்வாதிகள் போல்
  கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்.
  அவைகள் கால வெள்ளத்தில்
  கரைந்து போய்விடும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி பட்டாபி ராமன் ஐயா.

   நீக்கு
 13. கண்டிப்பு என்பது
  கடமையில்லை
  அவருக்கு!
  காத்திருக்கும்
  காலத்தில்
  கவித்துவமாய்
  நீ வாழ
  அவர் காட்டும்
  உள் துடிப்பு!!

  அருமையான வரிகள். வாழ்த்துகள் அருணா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மி்க்க நன்றி சூரியா அவர்களே.

   நீக்கு
 14. அருமையான வரிகள்
  கண்டிப்பு கண்டிப்பாக தேவை என்பதை இவ்வரிகள் உணர்த்துகிறது.

  பதிலளிநீக்கு