வியாழன், 5 பிப்ரவரி, 2015

எனது முகநூல் கவிதைகள்!!


சொர்க்கம்!!


இறந்த பிறகு
சொர்க்கம் போகலாம்
என்பார்கள். நீ
என் அருகில்
இருக்கும் போதே
சொர்க்கம் தெரிகிறதே...

------------------------------------------------------------------------------------------------------------

2. இன்பம்!


என்னை நீ
பார்க்கும் பொழுதெல்லாம்
இன்பம் என்றாய்.
உன்னை நான்
நினைக்கும் பொழுதும்
இன்பமடா.

-------------------------------------------------------------------------------------------------------
  
3. பூ அழகா?


பூ அழகு
என்பார்கள்....
உன் புன்னகையைக்
காணாத வரையில்!

------------------------------------------------------------------------------------------------------

4. அமுதம்!


அமுதம் என்று
சொன்னார்கள்.. நான்
அறிந்ததில்லை.
குமுத வாயால்
நீ கொடுத்த
முத்தச் சுவையை
அறியும் வரை.

---------------------------------------------------------------------------------------------------------

5. வா கண்ணே!


கோவிலுக்கு
ஏன் போகிறாய்?
சாமியிடம்
நீ கேட்கும்
நல்வாழ்வை
நான் தருகிறேன்.
என்னிடம் வா கண்ணே...

அருணா செல்வம்

05.02.2015

12 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
தம +1

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
குட்டிக்கவியை இரசித்தேன் படங்கள் அழகு பகிர்வுக்கு நன்றி
த.ம3

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைத்தும் அசத்தல்...

ஸ்ரீராம். சொன்னது…

ஐந்தும் அருமை.

'பசி'பரமசிவம் சொன்னது…

நோக்குவதும் நுகர்வதும் சுவைப்பதும் மட்டுமா இன்பம்? உங்கள் கவிதைகளைப் படிப்பதும் சுகம்தான்!

UmayalGayathri சொன்னது…

தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருந்தேன்.பிப்ரவரி 3
blogintamil.blogspot.com/2015/02/blog-post_3.html
காண வருக,

முதலிலும் கருத்துரை ஒன்று இட்டு வந்திருக்கிறேன் சகோ. கவனித்தீர்களா...? என தெரியவில்லை. ஆகையால்....இப்போது இட்டேன்

Yaathoramani.blogspot.com சொன்னது…

அற்புதம்
தூய்மையான காதல் மனம்
இப்படித்தான் நினைவு கொள்ளும்...
குறிப்பாக
இரண்டாம் கவிதையில் இயல்பாய் விழுந்த
"டா " பிடித்திருந்தது
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 6

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமை! அருமை அனைத்தும்! ரசித்தோம்!

Unknown சொன்னது…

முக்நூல் கவிதைகளா ,முகம் பார்த்து வடித்த கவிதைகளா :)
த ம 8

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அனைத்தும் அருமை. பாராட்டுகள்.

Jayakumar Chandrasekaran சொன்னது…

simply superb.

Jayakumar