வியாழன், 29 ஜனவரி, 2015

படித்ததில் சிரித்தது!


அழகு மனைவி!!  ஒரு நடு இரவில் தன் மனைவியின் கை போனில் “பீப்“ சத்தம் கேட்டது.
  கணவர் எழுந்து, அந்தக் கைபோனைப் பார்த்து விட்டு, தன் மனைவியிடம் கோபமாக “யார் இது? இந்த நேரத்தில் உன்னை பியுட்டிஃபுல் (beautiful) என்று சொல்லுறது?“ என்று கத்தினார்.
  மனைவி, “அட.... யாருடா அது.... நம்மளையும் யாரோ அழகுன்னு சொல்லுறாங்களே... அது யாருன்னு பார்ப்போம்...“ என்று ரொம்ப சந்தோஷமா எழுந்து வந்து தன் கைபோனைப் பார்த்தாள். உடனே கோபத்துடன் அவரைவிட சத்தமாகக் கத்தினாள்..
   “அட லூசு புருஷா..... மொதல்ல உன் கண்ணாடியை எடுத்து மாட்டிட்டு பாரு.... இது பியுட்டிஃபுல் (beautiful) இல்லை... பேட்டரிஃபுல் (battery full) என்று.

 ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

அவரவர் கவலை அவரவர்க்கு!!   டாக்டர், கணவனின் உடம்பைச் சோதித்துவிட்டு “இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள். அதற்குள் உங்களுக்குப் பிடித்தமான விஷயங்கள் எல்லாவற்றையும் நிறைவேத்திக் கொள்ளுங்கள்....“ என்று சொல்லி அனுப்பினார்.
    மாலை 5 மணி.... கண்ணீர் மல்க விஷயத்தை தன் மனைவியிடம் சொன்னான் கணவன். அவள் துடித்து அழுதாள்.
   கணவன், “எனக்கு உன் கையால் வெங்காய தோசையும் கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா. இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கி இருக்கிறது“ என்றான். செய்து கொடுத்தாள்.
   மாலை 7 மணி, “ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா. இன்னும் 5 மணி நேரம் தான் இருக்கு...!!“ என்றான். செய்து கொடுத்தாள்.
   இரவு மணி 10... “நல்ல பசும்பாலில் கொஞ்சமா சக்கரைப் போட்டு உன் கையால குடும்மா..... இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....! என்றான். மனைவி அதனையும் செய்தாள்.

   இரவு 12 மணி. தூங்கும் மனைவியை எழுப்பினான் கணவன். அவள்.... “பேசாமல் படுங்க.... காலையில எழுந்தவுடன் எனக்கு ஆயிரம் வேலை இருக்கு. சொந்தக்காரங்களுக்குச் சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்டுல புக் பண்ணனும்.... உங்களுக்கு காலையில எழுந்திருக்கிற வேலை கூட இல்ல....“ என்றாள் கோபமாக.

கணவன்.....?????!!!!!!!!


படித்ததில் சிரித்தது.

9 கருத்துகள்:

கவியாழி சொன்னது…

சிரிக்க முடிந்தது நன்றி

ஸ்ரீராம். சொன்னது…

ஹா...ஹா...ஹா...

இரண்டாவது கொடுமையான ஜோக் இல்லை?

Unknown சொன்னது…

ரசிக்க வைத்தன !
த ம 3

Avargal Unmaigal சொன்னது…

2 வது ஜோக்கில் வந்த கணவன் மிக அதிர்ஷடக்காரன் அவனுக்கு அவன் மனைவி 10 மணி வரை இருந்து பால் சுட வைச்சு கொடுத்துட்ட்டுதான் தூங்க போனா? அந்த நிலமை எங்க வீட்டில் வந்துச்சுன்னா 10 மணிக்கு நான் பாலை சுட வைச்சு மனைவிக்கு கொடுத்துவிட்டு இரவோட இரவாக . சொந்தக்காரங்களுக்குச் சொல்லிவிட்டு, ஐயருக்கு ஏற்பாடு பண்ணிவிட்டு , சுடுகாட்டுலயும் புக் பண்ணிட்டு அதுக்கு அப்புறம்தான் சாக முடியும் அப்படி நான் செய்யலைன்னா பூரிக்கட்டையாலே என்னை அடிச்சுடுவாங்க...அதனால சாகப் போகும் போதாவது அடி வாங்காம சாக நான் எல்லாவற்றையும் செய்துவிட்டுதான் சாகுனும் ஹீஹீஹீ எப்படி நம்ம கருத்து

வெங்கட் நாகராஜ் சொன்னது…

முதல் - முகப்புத்தகத்தில் ஆங்கிலத்தில் படித்தேன்...

இரண்டாவது கொஞ்சம் கொடுமை! :)

'பரிவை' சே.குமார் சொன்னது…

இரண்டையும் வாசித்திருக்கிறேன்...
இரண்டுமே ரசிக்க வைக்கும் நகைச்சுவைகள் அக்கா...

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஹஹ்ஹ்ஹாஹ்ஹ் செம! ரெண்டாவது ரசித்தோம் என்றாலும் கொஞ்சம் டெரர்....வயிற்றைக் கலக்குதுங்க.....ஹஹஹ்

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆகா
ஆகா
ரசித்தேன் சிரித்தேன் சகோதரியார
தம +1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

1. சந்தேக லூசு தான்...

2. இவளல்லவோ பொறுப்பான மனைவி...!