செவ்வாய், 13 ஜனவரி, 2015

இன்றே கொளுத்து!வம்பை வளர்த்திடும் வன்முறையும் தீதென்ற
தெம்பை இழக்கும் செயல்களையும் குற்றமதைக்
கண்டும் நகர்ந்து கடப்பதையும் இன்றே...நீ
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!

அனைவருக்கும் இனிய போகி பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்புடன்
அருணா செல்வம்

14.01.2015

15 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய தமிழர் தின நல்வாழ்த்துக்கள்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல விருப்பம். நிறைவேறட்டும்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

எங்கே செய்தோம்...!

வாழ்த்துக்கள்..

UmayalGayathri சொன்னது…

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். சொன்னது…

....திடுவோம்!

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கொண்டுவந்து போட்டே கொளுத்தென்னும் பாட்டினைக்
கண்டுஉவந்து கட்டுகிறேன் நற்கவிதை! - வண்டுவந்து
தேனருந்தும்! சீா்அருணா செல்வமே! மென்மேலும்
நானருந்தும் வெண்பாவை நல்கு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


தமிழ்மணம் 6

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல வரிகள் சகோதரி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தார் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் சொன்னது…

தீமைகளைக் கொளுத்திடுவோம்!
இனிய பொங்கல் வாழ்த்துகள்

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சகோதரர் கில்லர்ஜி பல தடவை முயன்றும் தங்கள் தளத்திற்கு வர இயலாமல் கருத்திட முடியாமல் பாவம்...தங்கள் தளம் ஃப்ரீஜ் ஆகிவிடுகின்றதாம். அதனால்தான் கருத்திட முடியவில்லை என்றும் தவறாக நினைக்க வேண்டாம் என்றுக் கேட்டுக் கொள்கின்றார். அவரது மனமார்ந்த பொங்கள்/தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவிக்கச் சொன்னார்.
நன்றி!

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…

வணக்கம்!

அன்புமனம் பொங்கட்டும்! பண்புமனம் பொங்கட்டும்!
இன்பமனம் பொங்கட்டும் இன்றமிழாய்! - மன்பதையில்
நன்மனிதம் பொங்கட்டும்! நல்லறங்கள் பொங்கட்டும்!
பொன்னமுதம் பொங்கட்டும் பூத்து!

எங்கும் பொதுமை இனிதே மலரட்டும்!
சங்கும் முழங்கட்டும் சால்புகளை! - மங்கலமாய்த்
தங்குகவே இன்பம்! தனித்தமிழ் நற்சுவையாய்ப்
பொங்குகவே பொங்கல் பொலிந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு